கனடா செய்திகள்

கனடா தபால் ஊழியர்கள் ஒப்பந்த சலுகையை நிராகரித்து வாக்களித்துள்ளனர்.

Canada Post  உள்ள தொழிற்சங்கமயமாக்கப்பட்ட தொழிலாளர்கள் Crown corporation இன் அண்மைய ஒப்பந்த சலுகையை நிராகரித்து வாக்களித்துள்ளனர்.

நகர்ப்புற அஞ்சல் சேவை வழங்குநர்களில் 68.5 சதவீதம் பேர் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்ததாகவும், கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் 69.4 சதவீதம் பேர் எதிராக வாக்களித்ததாகவும் Canadian Union of Postal Workers வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த சலுகையில் நான்கு ஆண்டுகளில் சுமார் 13 சதவீத ஊதிய உயர்வுகள் அடங்கும், ஆனால் அஞ்சல் சேவையை நிலைநிறுத்த பகுதிநேர ஊழியர்களும் அவசியமானவர்கள் என்று கூறி Canada Post அவர்களையும் இணைத்துக் கொண்டது. தொழிற்சங்கம் தமது அங்கத்தவர்களான சுமார் 55,000 அஞ்சல் சேவை ஊழியர்களை இந்த திட்டத்தை நிராகரிக்குமாறு வலியுறுத்தியிருந்தது.

இந்த வாக்குகள் எங்களுக்கு பக்கபலமாக இருப்பதால், தபால் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அங்கீகரிக்கக்கூடிய கூட்டு ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை மூலம் முன்னோக்கிச் செல்வதே ஒரே வழி என்பதை Canada Post இப்போது புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என Canada Post  இன் தொழிற்சங்கமயமாக்கப்பட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக கூறிய அஞ்சல் சேவை, தற்போதைய முடிவுகளால் நாங்கள் ஏமாற்றமடைந்தாலும் இந்தச் செயல்பாட்டில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளது.

Related posts

கனடாவின் வாடகை கொடுப்பனவுகளின் நிலைமாறுதல்

canadanews

NDP இன் தலைமைக்கான போட்டிக்காக British Columbia வில் பேராதரவை பெறும் மாகாண முதல்வர் David Eby.

canadanews

கனடா அணு ஆயுத ஆற்றலைக் கொண்டிருப்பதே உண்மையான சுதந்திரத்தின் அத்திவாரமாக அமையும்.

canadanews