அமெரிக்க-கனடா வரிப் போரில் பெரும் அதிகரிப்புக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான உள்ளூர் Automobiles துறை வேலைகள் இப்போது ஆபத்தில் உள்ளன என்று Brampton நகர முதல்வர் Patrick Brown எச்சரிக்கிறார். புதிய அபராதங்கள் முட்டாள்தனமான நியாயமற்றவை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump பின் அண்மைய வர்த்தக நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக Brown இன் கருத்துக்கள் வந்துள்ளன. U.S.-Mexico-Canada வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வராத அனைத்து கனேடிய பொருட்களுக்கும் அமெரிக்கா August 01 முதல் வரிகளை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்தியது.
fentanyl கடத்தலைத் தடுக்க கனடா தவறியதாகக் கூறப்படுவதே இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணம் என்று வெள்ளை மாளிகை கூறுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுடன் புதிய கட்டண உயர்வை தொடர்பு படுத்தியுள்ள வெள்ளை மாளிகையின் கூற்றை Brown முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவின் இத்தகைய அடிப்படையற்ற கட்டண உயர்வுகளால் Brampton போன்ற நகரங்களில் பொருளாதார வீழ்ச்சி கடுமையாக இருக்கும் என்று நகர முதல்வர் கூறுகிறார். குறிப்பாக உலகின் நான்காவது பெரிய Car தயாரிப்பாளரான Stellantis 3,000 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு பெரிய வாகன ஆலையை மீண்டும் திறப்பதை நிறுத்துவதாக அறிவித்ததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கும் என்று கூறுகின்றார்.
வர்த்தக உறவு தொடர்ந்து மோசமடைந்தால் அமெரிக்காவும் அதே அளவு இழப்பை சந்திக்க நேரிடும் என்று கூறும் Brown நமது நெருங்கிய நண்பர் மற்றும் அண்டை நாடுகளுடன் சிறந்த உறவைக் கொண்டிருக்காததன் விளைவுகளை அமெரிக்க நிர்வாகத்திற்கு நாம் காட்ட வேண்டும் எனவும் கூறினார். ஆயினும் கனேடிய நிறுவனங்கள் உயிர்வாழ்வதற்காக எல்லையைத் தாண்டி இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும் என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
