கனடா செய்திகள்

புதிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் பழங்குடியினரையும் இணைக்கும் Liberal அரசாங்கம்.

வியாழக்கிழமை பிரதமர் Mark Carney உடன் சந்திப்பிப்பினை முடித்த பின்னர் கருத்து வெளியிட்ட Metis தலைவர்கள் அமெரிக்காவுடனான வர்த்தகப் போரை எதிர்கொள்ளும் போது, பொருளாதாரத்தை வலுப்படுத்த Ottawa பயன்படுத்த விரும்பும் முக்கிய திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளில் தாங்களும் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக நம்பிக்கை வெளியிட்டனர்.

விடயங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்போது, Metis அரசாங்கங்கள் ஒன்றிணைந்து வேலையைச் செய்து முடிக்கிறோம் என்று Ontario வின் Metis Nation தலைவர் Margaret Froh கூறினார்.

வியாழக்கிழமை Ottawa வில் நடைபெற்ற கூட்டத்தின் தொடக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் கீழ் அமெரிக்காவுடனான அதிகரித்து வரும் நிலையற்ற வர்த்தக உறவுக்கு பதிலளிக்கும் விதமாக, பொருளாதாரத்தை மேலும் மீள்தன்மையுடன் மாற்ற உதவுமாறு Metis தலைவர்களுக்கு Carney அழைப்பு விடுத்தார். அத்துடன் நாம் புதிய கனடாவை உருவாக்கும்போது, பழங்குடி மக்களுடன் இணைந்து அதை உருவாக்கப் போகிறோம், அதனால்தான் இன்று நாங்கள் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என பிரதமர் குறிப்பிட்டார்.

June மாதத்தில் எதிர்க்கட்சியான Conservative கட்சியின் ஆதரவுடன் இந்தச் சட்டம் விரைவாக நிறைவேற்றப்பட்டாலும் மசோதா வரைவு செய்யப்படும் போது தங்கள் உரிமைகள் மதிக்கப்படவில்லை என்று கூறிய பழங்குடித் தலைவர்களால் இது பரவலாகக் கண்டிக்கப்பட்டது. திட்ட ஒப்புதல்களில் தங்கள் உரிமைகள் நிலைநிறுத்தப்படாது என்றும், போதுமான அளவு ஆலோசிக்கப்படாது என்றும் அவர்கள் அஞ்சுவதாகவும் அவர்கள் கூறினர்.

Indigenous Services அமைச்சர் Mandy Gull-Masty மற்றும் Crown-Indigenous Relations அமைச்சர் Rebecca Alty ஆகியோர் இந்த சந்திப்பு ஒரு முதல் படி என்றும், எதிர்காலத்தில் Metis தலைவர்களுடன் மேலும் உரையாடல்கள் நடைபெறும் என்றும் கூறினார். Carney யும் அவரது அமைச்சரவையும் ஏற்கனவே First Nations மற்றும் Inuit  தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த ஆண்டில் அமெரிக்காவின் உறவால் கனடா மிகப்பெரிய சவால்களை எதிர் கொள்ள நேரிடும்.

canadanews

சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் இன்று வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது.

canadanews

நவம்பர் 3ம் திகதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், கனடா தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாக்களிக்கின்றனர்

admin