கனடா செய்திகள்

கனடாவின் மென்மரங்களுக்கான வரிகளை 35% ஆக அதிகரித்த அமெரிக்கா.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மென்மரக் கட்டைகள் (softwood) மீதான எதிர் வரிகளை இரட்டிப்பாக்க இறுதி முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. British Columbia வில் உள்ள வணிகக் குழுக்கள் இந்த நடவடிக்கை எல்லையின் இருபுறமும் உள்ள சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறுகின்றன.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மென்மரக் கட்டைகளுக்கு நியாயமற்ற முறையில் மானியம் வழங்கப்படுவதாகக் கண்டறிந்த பின்னர், பெரும்பாலான கனேடிய நிறுவனங்களுக்கான வரி 6.74 சதவீதத்திலிருந்து 14.63 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது.


இந்த அதிகரிப்பானது அண்மையில் பொருள் குவிப்பிற்கு எதிரான வரிகள் 20.56 சதவீதமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, கனேடிய மென்மரத்திற்கான மொத்த வரி 35.19 சதவீதமாகக் உயர்ந்தமையால் ஏற்பட்டது. இதனடிப்படையில் பணத்தை வசூலிக்கத் தொடங்க அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறைக்கு அறிவுறுத்தப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

BC Lumber Trade Council இன் தலைவர் Kurt Niquidet ஒரு அறிக்கையில், இந்த முடிவு கனடாவில் வனவியல் சார்ந்த பகுதிகளில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் அமெரிக்க கட்டுமான நிறுவனங்களின் கட்டுமான செலவுகளையும் அதிகரிக்கிறது என்று கூறுகிறார்.

இதனிடையே, இந்த வாரம் British Columbia வில் தங்கியிருந்த பிரதமர் Mark Carney தொழில்துறைக்கு 700 மில்லியன் டொலர் கடன் உத்தரவாதங்களையும், நிறுவனங்களின் ஏற்றுமதி சந்தைகளை பன்முகப்படுத்தவும், அதன் தயாரிப்புகளை மேம்படுத்தவும் உதவும் வகையில் நீண்டகால அடிப்படையில் 500 மில்லியன் டொலர்களையும் உறுதியளித்தார்.

Related posts

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் Marco Rubio அடுத்த வாரம் கனடா வருகின்றார்.

canadanews

Gaza எல்லை அருகே கத்தியை கொண்டு மிரட்டியதால் கனேடியர் ஒருவர் கொலை : Israeli பொலீசார்

admin

அடுத்த வாரம் Washington இல் Trump ஐ சந்திக்க திட்டமிட்டுள்ளார் Carney.

canadanews