சனிக்கிழமை காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக Air Canada வும் அதன் விமானப் பணிப்பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
இது செவ்வாய்க்கிழமை தொடக்கம் படிப்படியாக செயல்பாடுகளைத் தொடங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. “உங்கள் ஊதியத்தில் வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்பட்டது,” என்று தொழிற்சங்கம் அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டு வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தது.
உறுப்பினர்கள் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் அறிவுறுத்தியதுடன், செவ்வாய்க்கிழமை மாலை முதல் விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் Air Canada கூறியது ஆனால் விமானங்களும் பணியாளர்களும் இடமில்லாமல் இருப்பதால் முழுமையான வழக்கமான சேவைக்குத் திரும்ப ஏழு முதல் 10 நாட்கள் வரை ஆகலாம் என்றும், அட்டவணை உறுதிப்படுத்தப்படும் வரை சில விமானங்கள் தொடர்ந்து இரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தது.
விமானங்கள் செயற்பாட்டில் உள்ளதாக காட்டப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்று விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
சனிக்கிழமை காலை வேலைநிறுத்தத்தில் மத்திய அரசு தலையிட்டு, தொழிலாளர் சட்டத்தின் 107வது பிரிவைப் பயன்படுத்தி Montreal ஐ தளமாகக் கொண்ட விமான நிறுவனத்தையும் தொழிற்சங்கத்தையும் binding arbitration இல் முன்னிலையாக கட்டாயப்படுத்தியது.
அந்த உத்தரவை தொழிற்சங்க அதிகாரிகள் மீறினர், இதனால் தொழிற்சங்கம் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்வதாகக் கூறியபோதும், கனடா தொழில்துறை உறவுகள் வாரியம் [Canada Industrial Relations Board] திங்களன்று வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூற வழிவகுத்தது.
