கனடா செய்திகள்

மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட Carney மற்றும் Trump.

பிரதமர் Mark Carney மற்றும் அமெரிக்க அதிபர் Donald Trump இருவரும் வியாழக்கிழமை பயனுள்ள மற்றும் பரந்த அளவிலான உரையாடலை நடத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் வர்த்தகம் மற்றும் புதிய பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவு குறித்து விவாதித்தனர். Ukraine மற்றும் ஐரோப்பாவில் நீண்ட கால அமைதி குறித்தும் அவர்கள் பேசினர் அத்துடன் விரைவில் மீண்டும் இருவரும் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து வரும் வர்த்தகப் போரின் மத்தியிலும், புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக சுயமாக விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து மூன்று வாரங்களுக்குப் பின்னர் இரு நாடுகளுமிடையிலான இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

August 01 ஆந் தேதி, Carney மற்றும் Trump  ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டத் தவறியபோது ​​அமெரிக்க ஜனாதிபதி கனேடிய பொருட்களுக்கான வரிகளை 35 சதவீதமாக உயர்த்தினார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக பெரும்பாலான தயாரிப்புகள் வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

வர்த்தக மோதலால் அதிகம் பாதிக்கப்பட்ட தொழில்களை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளையும் கனடா மேற்கொண்டுள்ளதுடன் கனடாவின் பொருளாதாரம் அமெரிக்காவை அதிகமாக நம்பியிருப்பதிலிருந்து பாதுகாக்க அதன் ஏற்றுமதி சந்தைகளை பன்முகப்படுத்தவும் மத்திய அரசு முயற்சிகளை தொடங்கியுள்ளது.

புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நம்பிக்கையில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் வியாழக்கிழமை Trump க்கும் Carney க்கும் இடையிலான கலந்துரையாடல் மிகவும் பிந்தியது. இதனிடையே, அண்மைக் காலங்களாக பல கனேடிய சட்டத்துறை சார்ந்தவர்கள் தங்கள் துறைசார்ந்தவர்களை சந்திக்க Washington இற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அக்டோபர் மாதத்தில் GDP உற்பத்தி 0.3% வளர்ச்சி – Statistics Canada தெரிவிப்பு

admin

பிரதமருடனான சந்திப்பை கடந்த தசாப்த்தத்தின் சிறந்த சந்திப்பு என வர்ணிக்கிறார் Doug Ford.

canadanews

கனடாவைச் சேர்ந்த திரைக்கலைஞர் Ben Proudfoot ற்கு இரண்டு முறை Oscar விருது;

Editor