அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் Mike Johnson இந்த வாரம் பெரும்பாலான G7 நாடுகள் மற்றும் Ukraine ஐ சேர்ந்த அங்கத்தவர்களுடனான சந்திப்பிற்காக Ottawa இல் தங்கியிருப்பார்.
கனடாவின் G7 தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக, வியாழன் முதல் சனிக்கிழமை வரை கனேடிய நாடாளுமன்ற சபாநாயகர் Francis Scarpaleggia தனது சகாக்களை வரவேற்கிறார். உலகளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நாடாளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்க அதிகாரிகள் கூடுவார்கள் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் online தவறான தகவல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறை போன்ற கருப்பொருள்கள் குறித்த பணி அமர்வுகள் இடம்பெறும்.
Ukraine நாடாளுமன்றத் தலைவர் மற்றும் G7 நாடுகளைச் சேர்ந்த முக்கிய நாடாளுமன்ற அதிகாரிகளை அழைக்க கனடா தேர்வு செய்துள்ளது. இருப்பினும் Japan அவைத் தலைவர் Fukushiro Nukaga இச்சந்திப்பில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் Ukraine நாடாளுமன்றத் தலைவர் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ukraine மீதான Russia வின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் முயற்சிகள் ஐரோப்பிய தலைவர்களை எச்சரிக்கை செய்திருக்கும் நிலையில் இந்த வார சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. Russia ஜனாதிபதி Vladimir Putin எந்தவொரு போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமும் பிரதேசங்களைப் பெறுவாராயின் அது ஐரோப்பிய பாதுகாப்பிற்கு மேலும் சவாலாக அமையும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
