Royal Canadian கடற்படையின் அடுத்த நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான இறுதிப் போட்டியில் இரண்டு போட்டியாளர்களில் ஒருவர் ஒப்பந்தத்தை முடிப்பதற்கான நம்பிக்கையில் பல தொழில்துறை கூட்டிணைவு மற்றும் பொருளாதார நன்மைகளை முன்மொழிகின்றனர்.
கனடாவின் lithium-ion பேட்டரி உற்பத்தி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, விண்வெளி, இரும்பு, முக்கியமான கனிமச் சுரங்கம் மற்றும் நிலையான ஆற்றல் ஆகியவற்றில் முதலீடுகளை உள்ளடக்கிய பல்வேறு தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப நன்மை ஒத்துழைப்புகளை கொண்டுள்ள நிறுவனமான Hanwha Oceans வரும் வாரங்களில் கூடுதல் விவரங்களை வெளியிட உறுதியளிக்கிறது.
எரிசக்தி ஒத்துழைப்பு முதல் battery ஒத்துழைப்பு வரை Hanwha வலுவாக இருக்கும் இவற்றை விட காலாட்படை சண்டை வாகனங்கள் மற்றும் howitzer போன்றவை பற்றியும் நாங்கள் பேசியுள்ளோம் என்று Hanwha Global Defense தலைமை நிர்வாக அதிகாரி Michael Coulter செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கனடிய இராணுவத்தில் howitzer களுக்கான தேவை இருப்பதை நாங்கள் அறிவோம். கனேடிய அரசாங்கம் தேடுவது நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு அப்பாற்பட்டது என்பதால், இந்த சலுகையும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு அப்பாற்பட்டது. இது கனடாவில் உண்மையான தொழில்துறை திறன் வளர்சிக்கு பெரும் முன்னேற்றமாக அமையும்.
ஒரு வருடத்திற்கு முன்னர் Australia வின் Geelong இல் ஒரு கவச வாகனத் தொழிற்சாலையைத் திறந்து வைத்த முயற்சியை சுட்டிக்காட்டிய நிறுவனம் தற்போது அங்கு சுமார் 1,000 ஊழியர்கள் சண்டை வாகனங்கள் மற்றும் சுயமாக இயக்கப்படும் howitzer உருவாக்குவதில் பணிபுரிவதாக கூறுகிறது.
கனடாவும் இதேபோன்ற ஒன்றை தேடி வருகிறது. கனடாவின் இரு கடற்கரைகளிலும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல் நிலையான வசதிகளை அமைக்க Hanwha முன்வந்துள்ளது. அத்துடன் ராங்கிகள், ரொக்கெட்டுகள், howitzer மற்றும் விநியோக வாகனங்களை உருவாக்கவும் கனடாவில் ஒரு உற்பத்தி வசதியையும் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
