கனடாவின் நிதி மற்றும் பெறுகை நடைமுறை தொடர்புபட்ட அமைச்சர்கள் பெரும்பாலான மத்தியரசின் ஒப்பந்தங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு பணத்தைச் சேமிப்பதற்கான வழிகளைக் கண்டறிவதற்காக தற்போதுள்ள நடைமுறையில் உள்ள மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து மத்தியரசின் ஒப்பந்தங்களையும் மீளாய்வு செய்வதற்கான திட்டத்தை வகுகுப்பதற்கென 45 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.
நிதியமைச்சர் François-Philippe Champagne மற்றும் Public Works and Procurement அமைச்சர் Joël Lightbound ஆகியோரால் பிறப்பித்த இந்த உத்தரவு அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசாங்க செலவினங்களை 15 சதவீதம் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளதன் பின்னணியிலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேமிப்புகளைக் கண்டறிவதற்கு ஏற்கனவே உள்ள மற்றும் திட்டமிடப்பட்ட ஒப்பந்தங்களை மதிப்பிடுவதற்கான ஒரு செயல்முறையை இந்தத் திட்டம் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று இரு அமைச்சர்களும் அறிவுறுத்தியுள்ளனர். இது சர்வதேச சிறந்த நடைமுறைகள் பற்றிய ஆய்வையும், கனேடிய விற்பனையாளர்களால் வணிக ரீதியாகக் கிடைக்கும் தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தையும் உள்ளடக்குவதாகும்.
முக்கிய கொள்முதல் ஒப்பந்தங்களில் தங்கள் வாங்கும் சக்தியைத் திரட்டுவதற்கும் Digital கொள்முதல் தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் ஈடுபடுவதற்கான வழியையும் இந்த முன்மொழிவு உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று கடிதம் மேலும் கூறுகிறது.
