இந்த வாரம் Poland இற்குள் Russia வின் ஆளில்லா விமானம் ஊடுருவியது தொடர்பாக Russian தூதுவர் Oleg Stepanov வை அழைத்து கனடா விளக்கம் கோரியுள்ளது. NATO இராணுவ கூட்டணியின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் புதிய முயற்சிக்கு Ottawa உதவ முன்வந்துள்ள நிலையில் Global Affairs Canada, Russia தூதுவரிடம் விளக்கம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைக்கு இடையில் பல Russia ஆளில்லா விமானங்கள் Poland எல்லைக்குள் நுழைந்ததாக Poland தெரிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனிடையே NATO நட்பு நாடுகள் சிலவற்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதன்கிழமை, கனடா Russia தூதுவரை வரவழைத்து Poland வான்வெளியில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு தமது அதிகாரப்பூர்வமான கண்டனத்தை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் Anand தெரிவித்துள்ளார்.
வான்வெளி மீறல்களின் அளவு மற்றும் கால அளவு, இந்த நடவடிக்கை வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக கனடா கூறுகிறது. எந்தவொரு நாடும் தங்கள் வான்வெளியில் இந்த வகையான அத்துமீறலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் கனடா மேலும் கூறுகிறது.
இவ்விடயம் தொடர்பாக, Ottawa வில் உள்ள Russia தூதரகம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும், Russia வும் அதன் நெருங்கிய கூட்டாளியான Belarus உம் ஊடுருவல்களின் நெரிசலால் ஏற்பட்ட தவறாக இருக்கலாம் என்று கூறியுள்ளன, ஆனால் பல ஐரோப்பிய தலைவர்கள் இது அவர்களின் திறன் மற்றும் கூட்டமைப்பு உறுதியை வேண்டுமென்றே சோதிப்பதாக கூறுகின்றனர்.
