கடந்த ஆண்டு கனடாவின் Department of immigration பெரும்பாலான தனிப்பட்ட அகதிகளின் Sponsorship விண்ணப்பங்களை 2028 வரை முடக்குமாறு பரிந்துரைத்ததாக Canadian Press பெற்றுக்கொண்ட ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த November இல் வெளிநாட்டிலிருந்து கனடாவிற்கு அகதிகளை அழைத்து வர விரும்பும் சமூக அமைப்புகள் அல்லது ஐந்து நபர்களைக் கொண்ட குழுக்கள் தாக்கல் செய்த அகதிகளின் மீள்குடியேற்ற விண்ணப்பங்களை மத்திய அரசு இடைநிறுத்தியபோது அகதிகளின் சட்ட ஆலோசகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
புதிய Sponsorship விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதை இது முடக்கியது 2025 ஆம் ஆண்டு இறுதி வரை இந்த முடக்கம் அமுலில் இருக்கும். Sponsorship ஒப்பந்ததாரர்களிடமிருந்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் அகதிகளுக்கான பகுதி சட்டப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவர்களை வரவேற்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் பிற குழுக்களிடமிருந்து புதிய விண்ணப்பங்களுக்கான ஒதுக்கீட்டையும் இது குறைத்தது.
தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் மூலம் (access-to-information law) Canadian Press பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில், அந்த அமைப்பில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையை நிர்வகிக்கக்கூடிய நிலைக்கு கொண்டு வருவதற்கு விண்ணப்ப முடக்கம் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று Department of immigration பரிந்துரைத்தமை வெளிப்படுகிறது.
Immigration, Refugees and Citizenship Canada விண்ணப்பங்கள் மீதான முடக்கம் இந்த ஆண்டு இறுதியில் நீக்கப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பதை இன்னும் கூறவில்லை. குடிவரவு அமைச்சர் Lena Diab மற்றும் அவரது அலுவலகத்திடம் கருத்து தெரிவிக்குமாறு கேட்கப்பட்ட போதும், வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை அவர்கள் பதிலளிக்கவில்லை.
