November 4 ஆம் திகதி அரசாங்கம் மத்திய வரவுசெலவுத்திட்டத்தை தாக்கல் செய்யும் என்று நிதியமைச்சர் Francois-Philippe Champagne கூறுகிறார். நிதியமைச்சராக Champagne தாக்கல் செய்யும் முதல் வரவுசெலவுத்திட்டம் இதுவாகும். செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போதே அவர் இத்திகதியை அறிவித்தார்.
பிரதமர் Mark Carney யின் கீழ் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட Liberal களின் முதலாவது வரவுசெலவுத்திட்டமாக இது அமையும். அத்துடன், Ottawa’s வின் வரவுசெலவுத்திட்ட கண்காணிப்புக் குழு நிதிக்கொள்கை குறித்து கவலைப்படுவதாகக் கூறும்போது வரவுசெலவுத்திட்டம் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கனடாவின் எதிர்காலத்தில் இந்த வரவுசெலவுத்திட்டம் தலைமுறை முதலீடாக அமையும் என்று நிதியமைச்சர் கூறுகின்றார். மத்தியரசின் வரவுசெலவுத்திட்டம் பொதுவாக வசந்த காலத்தில் வரும், ஆனால் Liberal கள் அதை இலையுதிர் காலம் வரை தாமதப்படுத்தினர். நிதியாண்டின் மூன்றில் இரண்டு பங்கு முடியும் வரை செலவினத் திட்டத்தை தாமதப்படுத்தும் பிரதமரின் முடிவை Conservative தலைவர் Pierre Poilievre கடுமையாக சாடினார்.
கனடாவின் பொருளாதாரத்தை அமெரிக்க வர்த்தக சீர்குலைவிலிருந்து பாதுகாக்க Ottawa முயற்சிப்பதால், Carney இந்த வரவுசெலவுத்திட்டத்தை செலவுக் குறைப்பு மற்றும் முதலீடு இரண்டிலும் கவனம் செலுத்தும் ஒன்றாகக் குறிப்பிடுகின்றார். நாடாளுமன்றத்தின் இலையுதிர் காலக் கூட்டத்தொடரில் வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கு குறைந்தபட்சம் ஒரு கட்சியின் ஆதரவு தேவைப்படும்.
பல நிதிக் கொள்கையாளர்கள் இலையுதிர் கால வரவுசெலவுத்திட்டத்தில் மத்தியரசின் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இரும்பினும் Carney, மூலதனச் செலவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மூன்று ஆண்டுகளுக்குள் வரவுசெலவுத்திட்டத்தில் செயற்பாட்டுப் பக்கத்தை சமநிலைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
