இந்த வாரம் New York இல் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், கனடா பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய முடியும் என்று பிரதமர் Mark Carney கூறினார். அங்கு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தனது மேடை நேரத்தை பன்முகத்தன்மை குறித்த தனது சந்தேகத்தை வெளிப்படுத்தவும், ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கவும் பயன்படுத்திக்கொண்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு நான் சென்ற பின்னர் கனேடியர்களுக்கு பிரகாசமான வாழ்விற்கான பல சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்று பிரதமர் மேலும் கூறினார்.
முன்னதாக, ஐ.நா. பொதுச் சபையின் 80வது அமர்வில் Trump ஆற்றிய சுமார் ஒரு மணி நேர உரையில் ஐக்கிய நாடுகள் சபையைப் பற்றி முறைப்பாடுகளை கூறினார். அத்துடன் புவிசார் அரசியலையும் உலகப் பொருளாதாரத்தையும் தலைகீழாக மாற்றிய அவரது “America First” கொள்கைகள் பற்றியும் கருத்துரைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. ஆனால் அது அதை நிறைவேற்றுவதற்கு அருகில் கூட வரவில்லை என்று Trump குறை கூறினார். பின்னர், தனது குறைகள் நிறைந்த உரையால் கவலையடைந்த இராஜதந்திரிகளை ஜனாதிபதி சமாதானப்படுத்தினார். சில சமயங்களில் ஐக்கிய நாடுகள் சபையுடன் உடன்படாமல் இருக்கலாம் என்றாலும், இந்த நிறுவனத்தில் அமைதிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால், அவரும் அதற்குப் பின்னால் இருக்கிறார் என்று அவர் பொதுச்செயலாளர் António Guterres ஐ பார்த்துக் கூறினார்.
தனது உரையில், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில் பங்கேற்ற கனடா உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகளையும் Trump பின்தள்ளினார். இந்த நடவடிக்கை October 7, 2023 அன்று Israel மீதான தாக்குதலுக்கு Hamas இற்கு வெகுமதி அளிப்பதாக அமையும் என்று Trump கூறினார்.
New York இருந்தபோது, Carney ஜனாதிபதியுடன் நேரடியாகச் சந்திக்கவில்லை. எனினும், செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி ஏற்பாடு செய்த உலகத் தலைவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் Carney கலந்து கொண்டார்.
