கனடா செய்திகள்

இராணுவ பெறுகை நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் புதிய அலுவலகத்தை ஆரம்பிக்கிறது.

கனேடிய ஆயுதப் படைகளுக்கான பாதுகாப்பு பெறுகை நடைமுறைகளையும் உபகரணங்களையும் விரைவாக கொள்வனவு செய்வதனை மையப்படுத்தும் நோக்கத்துடன், Ottawa வியாழக்கிழமை ஒரு புதிய பாதுகாப்பு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கியது.

பெறுகை நடைமுறையில் சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தி முடிந்தவரை விரைவாக வழங்கப் போகிறோம். இதன்போது நாம் கொஞ்சம் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டி நேர்ந்தால், அதற்கும் தயங்கப்போவதில்லை என்று பாதுகாப்பு கொள்முதல் துறை செயலாளர் Stephen Fuhr செய்தி நிறுவனமொன்றிற்கு தெரிவித்தார். கனடாவின் பாதுகாப்பு கொள்முதல் முறை மிகவும் சிக்கலானது மட்டுமல்ல மெதுவானது அத்துடன் இது பல துறைகளிலும் பரவியுள்ளது என்று Stephen Fuhr மேலும் தெரிவித்தார்.

பொதுச்சேவைகள் மற்றும் Procurement Canada இற்குள் இருக்கும் இந்த அலுவலகத்தை நடத்துவதற்கு, Liberal அரசாங்கம் பாதுகாப்புத் துறைக்கு வெளியே இருந்து ஒருவரை நியமிக்கவுள்ளது. இதற்கமைய Royal Bank of Canada வின் முன்னாள் நிர்வாகியும், Goldman Sachs நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளருமான Doug Guzman இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பெறுகை நடைமுறைகளை சீர்திருத்தம் செய்தல், பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்தல் மற்றும் “Buy Canadian” கொள்கைகளை செயல்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை பிரதமர் Mark Carney வசந்த காலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் அடுத்த வாரம் முதல் Ozempic இன் எடை குறைப்பு மருந்துதான Wegovy கிடைக்கும்

admin

Montreal துறைமுகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட கார்கள் மீட்பு – GTA இலிருந்து திருடப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு

admin

Markhamஇல் 44 வயதான ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொலை

Canadatamilnews