கனடா செய்திகள்

அடுத்தவாரம் மீண்டும் சந்திக்கின்றனர் Carney மற்றும் Trump.

பிரதமர் Mark Carney அடுத்த வார தொடக்கத்தில் Washington செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமராக பதவியேற்ற பின்னர் அவர் இரண்டாவது முறையாக அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார். இப்பயணத்தின் போது பிரதமர் அமெரிக்க அதிபர் Donald Trump ஐ சந்தித்து இரும்பு மற்றும் அலுமினியங்கள் மீதான வரிகள் குறித்து சாத்தியமான நகர்வுகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை மாலை Carney, Washington இற்கு சென்று, செவ்வாய்க்கிழமை Trump ஐ சந்திக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் அலுவலகம் இதனை ஓர் கடைமையுடன் தொடர்புடைய பயணமாக விவரிக்கிறது.

பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் Anita Anand, தொழில்துறை அமைச்சர் Melanie Joly மற்றும் கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc ஆகியோர் இப்பயணத்தின் போது இணைந்து கொள்ளவுள்ளனர்.

Canada-U.S.-Mexico ஒப்பந்தம் மீளாய்விற்கு உட்பட்டுள்ள இந்த நேரத்தில் நடைபெறவிருக்கும் இருவருக்குமிடையிலான இச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது. இது கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்து அதிக கவனம் செலுத்துவதாக அமையும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.

Related posts

வேலையின்மை விகிதம் நவம்பரில் 6.8% ஐ எட்டியுள்ளது

admin

Trudeau நிர்வாகத்தை கவிழ்க்கும் முயற்சியில் Conservatives பிரேரணை ஒன்றை முன்வைக்கின்றனர்

admin

மற்றொரு வேலை நிறுத்தம் நோக்கி நகர்கின்றதா Canada Post?

canadanews