கனடா செய்திகள்

Gaza மனிதாபிமான உதவியில் ஈடுபட்டுள்ள கனேடியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக Gaza விற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்ற பாலஸ்தீன ஆதரவு முயற்சியான Global Sumud Flotilla தொடர்பாக இரண்டு கனேடிய குடிமக்கள் Israel இல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Global Affairs Canada தெரிவித்துள்ளது.

தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர், மேலும் அதைக் கோருபவர்களுக்கு தூதரக உதவியை வழங்குகிறார்கள் என்று கூறும் Global Affairs Canada, இருப்பினும் தனியுரிமைச் சட்டத்தின் விதிகள் காரணமாக, மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிட முடியாது என்றும் கூறுகிறது.

அனைத்து Flotilla பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அவர்கள் விரைவாகத் திரும்புவதை உறுதிப்படுத்தவும், தூதரக சேவைகளை சரியான நேரத்தில் அணுகவும் Israel அதிகாரிகளை கனடாவின் அறிக்கை வலியுறுத்துகிறது.

Gaza வில் மனிதாபிமான நெருக்கடி குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட Global Sumud Flotilla இல் மருத்துவர்கள், கலைஞர்கள், மதகுருமார்கள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் உள்ளனர். Israel கடற்படை புதன்கிழமை படகுகளை இடைமறிக்கத் தொடங்கியதுடன் உலகளாவிய இந்த மனிதாபிமான உதவித்திட்டத்தை “Hamas-Sumud flotilla” என்றும் விபரித்துள்ளது.

இந்நிலையில் Global Affairs Canada, பாலஸ்தீனத்திற்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடியர்களுக்கு அறிவுறுத்துகிறது. கனடா அரசாங்கத்தால் கனேடிய பயணிகளின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யவோ அல்லது வெளிநாடுகளில் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கவோ முடியாது என்றும் அவ்வாறு பயணம் செய்வதாயின் பயணம் செய்வதற்கான முடிவு தனிப்பட்டது அதற்கு தனிநபர்களே பொறுப்பு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

விரைவில் மீண்டும் நாடாளுமன்றம் திரும்ப தயாராகும் Pierre Poilievre.

canadanews

என்றும் இல்லாத அளவிற்கு முன்னேறியுள்ள கனடா-அமெரிக்க உறவு.

canadanews

Canada Post உடன் மீண்டும் பேசவுள்ள கனேடிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்

canadanews