கனடா செய்திகள்

கனடா மீது இன்னும் வரிகள் விதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

Canada-U.S.-Mexico வர்த்தக ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்த பின்னரும் அமெரிக்கா சில துறைகளை குறிவைத்து வரிகளை விதிக்கும் என்பது தெளிவாகிறது என்று பிரதமர் Mark Carney கூறுகிறார்.

கனடாவில் CUSMA என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளன, ஆனால் அந்தப் பேச்சுவார்த்தைகள் துரதிஸ்ரவசமாக நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வாய்ப்பில்லை என்று Carney கூறுகிறார்.

அதனால்தான் கனடா இரும்பு, அலுமினியம், autos மற்றும் மென்மரக் கட்டைகள் போன்ற துறை சார்ந்த வரிகளில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று அவர் கூறுகிறார்.

கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc நேற்றைய தினம் Washington இல் இருந்து நாடு திரும்பிய பின்னர், கட்டண நிவாரணத்திற்காக அழுத்தம் கொடுக்க அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றார்.

செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் Carney இடையேயான சந்திப்பின் போது, ​​கனடா மீது இன்னும் வரிகள் இருக்கும் என்றும், CUSMA தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலோ அல்லது வேறு ஒப்பந்தங்களால் மாற்றப்பட்டாலோ தனக்கு கவலையில்லை என்றும் Trump செய்தியாளர்களிடம் கூறினார்.

Related posts

February 01 முதல் கனடா இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் – Donald Trump

canadanews

கனடா NATO செலவின இலக்குகளை எட்டும் என்று நம்பிக்கை வெளியிடுகின்றார் பாதுகாப்பு அமைச்சர்.

canadanews

Toronto துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

canadanews