கனடா செய்திகள்

கனடா இன்னும் இந்தியாவின் நம்பகமான எரிசக்தி வழங்குநராக இல்லை என்று இந்திய உயர்ஸ்தானிகர் கூறுகிறார்.

இந்தியாவுடனான நீண்டகால உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுக்கு மத்தியில், கனடா இன்னும் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் நம்பகமான வழங்குனராக இல்லை என்று அந்த நாட்டின் புதிய உயர்ஸ்தானிகர் கூறுகிறார்.

British Columbia வில் ஒரு சீக்கிய ஆர்வலரின் கொலையில் இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் ஈடுபட்டதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் இருப்பதாக முன்னாள் பிரதமர் Justin Trudeau கூறியதை தொடர்ந்து, ​​கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி நிறுவனமொன்றின் பிரத்தியேக நேர்காணலின் போது தொகுப்பாளர், கனடாவுக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் Dinesh Patnaik இடம் Russia விற்குப் பதிலாக இந்தியா கனடாவிடம் எரிசக்தி வழங்குனராக மாறுமா என்று கேட்டார்.

உலகின் மிகப்பெரிய நுகர்வோராக இருக்கும் நாங்கள் நம்பகமான வழங்குனராக இருக்கக்கூடியவர்களை தேடுகிறோம். என்று கூறினார். மேலும் அவர். “இன்று, ‘சரி, நான் உங்களுக்கு வழங்கல் செய்யப் போகிறேன்’ என்று கூறிவிட்டு, நாளை, ‘இல்லை, எனக்கு உங்களுடன் இந்தப் பிரச்சனை இருக்கிறது, என்னால் உங்களுக்கு வழங்கலை மேற்கொள்ள முடியாது என்று கூறும் வழங்குனரை அல்ல.” என்றார்.

அந்த வகையில் கனடா நம்பகமானதாக அவர் கருதுவாரா என்று கேட்டபோது, ​​இந்தியத் தூதுவர் “இன்னும் இல்லை என்று பதிலளித்தார். எனினும், கடந்த கால கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்தியா கனடாவை நம்பகமான கூட்டாளியாக இருக்க விரும்புகிறது என்றும் Patnaik கூறினார்.

Related posts

வலுவடையும் கனேடிய சந்தை நிலவரமும் தாக்கம் செலுத்தும் அமெரிக்க உறவும்.

canadanews

இருதரப்பு நெருக்கத்தின் அடையாளமாக விளங்கிய நூலகத்தின் கனேடிய நுழைவாயில் மூடப்பட்டது.

canadanews

மாகாண முதல்வர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு ஆரம்பித்துள்ளது.

canadanews