கனடா செய்திகள்

RCMP கருத்துக்களுக்கு Poilievre நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

அரசாங்க அவைத் தலைவர் Steven MacKinnon, RCMP பற்றிய அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்காக இன்று நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்குமாறு Pierre Poilievre விடம் கோரிக்கை விடுத்தார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட YouTube channel இற்கு அளித்த பேட்டியில், Conservative தலைவர் Poilievre, RCMP தலைமையை “இழிவானது” என்று அழைத்தார், அத்துடன் முன்னாள் பிரதமர் Justin Trudeau வையும் அவர்கள் மறைப்பதாக குற்றம் சாட்டினார்.

அதாவது அரசாங்க வணிகம் செய்த ஒருவரிடமிருந்து விடுமுறை கால சலுகையை பெற்றுக் கொண்டதற்காக Trudeau மீது குற்றவியல் குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம் என்றும், இது 2016 Aga Khan ஊழலைக் குறிக்கிறது என்றும், RCMP இல்லையென்றால் Trudeau சிறையில் இருப்பார் என்றும் Poilievre கூறினார்.

இது தொடர்பாக Poilievre மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய Green Party தலைவர் Elizabeth May, இந்த விடயம் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் எந்தக் குற்றமும் இல்லை என்று கூறினார். இவ்விடயம் தொடர்பாக நேற்றையதினம் பிற்பகல் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கருத்து வெளியிட்ட MacKinnon, Conservative தலைவரின் கருத்துக்கள் நீதித்துறை மற்றும் RCMP இன் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கியதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும் Poilievre நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்பதுடன் அவரது செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், Poilievre இன் கருத்துக்கள் முன்னாள் RCMP ஆணையாளர் Brenda Lucki ஐ நோக்கியது என்றும் கூறினார்.

Related posts

கனேடிய விமான நிலையத்தில் வெடிபொருட்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களைக் கண்டறிய CT scanners பொருத்தப்பட்டுள்ளன

admin

கனடாவில் அடுத்த வாரம் முதல் Ozempic இன் எடை குறைப்பு மருந்துதான Wegovy கிடைக்கும்

admin

புதிய வரி விதிப்பு தொடர்பில் அமைச்சரவை மற்றும் மாகாண முதல்வர்களை சந்திக்கின்றார் Carney.

canadanews