கனடா செய்திகள்

கனேடிய அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டமும் பாதுகாப்புத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் தேசிய பாதுகாப்புக்காக 73 பில்லியன் டொலர்களை செலவிடுவதற்கான திட்டங்களை மத்திய அரசு செவ்வாயன்று வெளியிட்டுள்ளது. இது கனடா NATO செலவின உறுதிமொழிகளை பூர்த்தி செய்ய தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு பெரிய பாய்சலாகும்.

பாதுகாப்பு செலவினத் திட்டம் குறிப்பாக எளிமையாக இருந்தாலும் மிகப்பெரிய டொலர் புள்ளிவிவரங்களை முன்வைக்கிறது. அத்துடன் அரசாங்கத்தின் வாக்குறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பு தொழில்துறை உத்தியில் என்ன இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

நிதியமைச்சர் François-Philippe Champagne இன் இந்த முதலாவது வரவுசெலவுத்திட்டம் கனேடிய ஆயுதப் படைகளை கட்டியெழுப்ப ஐந்து ஆண்டுகளில் மொத்த அடிப்படையில் $81.8 பில்லியனை ஒதுக்குவதாகக் கூறுகிறது. இந்தத் தொகையில், இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கு சமமான தொகையை கனடா செலவிடுவதற்கான NATO வின் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இறுதியாக June மாதத்தில் பிரதமர் Mark Carney ஏற்கனவே அறிவித்த $9 பில்லியன் செலவினமும் அடங்கும்.

மூன்று ஆண்டுகளில் $68.2 மில்லியன் நிதியுதவியுடன் BOREALIS என்ற புதிய ஆராய்ச்சி நிறுவனத்தையும் கனடா அமைக்கும் என்றும் வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் quantum தொழில்நுட்பத்திற்கும், முக்கியமான கனிய வளர்ச்சிக்கும், பாதுகாப்புத் துறை விநியோகச் சங்கிலிகளுக்கு முக்கியமாக இருக்கும் கனிமங்களுக்கும் செல்கின்றன. இதைவிட பாதுகாப்பு ஒத்துழைப்புக்களுக்காக அரசாங்கம் 6.2 பில்லியன் டொலர்களை ஒதுக்குகின்றது. இதில் Ukraine இற்கான இராணுவ உதவியும் அடங்கும்.

Related posts

Latvia இல் கனேடிய வீரர் ஒருவர் off-duty இன் போது உயிரிழப்பு

admin

ஆகஸ்டில் சிறிய சந்தைகளில் வாடகை உயர்வு பெரிய சந்தைகளில் வீழ்ச்சியை விட அதிகமாக இருந்தது

admin

Liberal கட்சியினர் மத்தியில் உரையாற்றிய Justin Trudeau

canadanews