கனடா செய்திகள்

வரவுசெலவுத்திட்டம் மீதான முதலாவது சோதனையில் வெற்றி பெற்று முன்னேறுகிறது Liberal அரசாங்கம்.

சிறுபான்மை Liberal அரசாங்கம் அதன் மத்தியரசின் வரவுசெலவுத்திட்டம் மீதான மூன்று சோதனைகளில் முதல் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் Conservative களின் sub-amendment மீதான வாக்கெடுப்பின் போது 139 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் 198 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். 

கனேடியர்கள் மலிவு விலையில் வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு வரவுசெலவுத்திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கவில்லை என்ற அடிப்படையில் வரவுசெலவுத்திட்டத்தை நிராகரிக்குமாறு கோரியே sub-amendment நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதேவேளை மற்றுமொரு திருத்தம் மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை வாக்களிக்கவுள்ளனர். அரசாங்கம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், அல்லது வரவுசெலவுத்திட்டம் மீதான முக்கிய வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், அது சபையின் நம்பிக்கையை இழந்ததன் அடிப்படையில் ஓர் தேர்தலுக்கு வழியமைக்கும்.

இரண்டு திருத்தங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவுத்திட்டத்தை நிராகரிக்க அழைப்பு விடுப்பதால், வாக்குகள் நம்பிக்கைக்குரிய விடயங்களாகக் கருதப்படுகின்றன என்று அரசாங்க அவைத் தலைவர் Steven MacKinnon இன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரவுசெலவுத்திட்டம் பற்றி நிதியமைச்சர் François-Philippe Champagne கூறுகையில், இந்த வாரம் கனேடியர்கள் வரவுசெலவுத்திட்டத்தில் மகிழ்ச்சியடைவதைக் கேட்டதாகக் கூறுகின்றார் அத்துடன் வீதியில் சென்று மக்களிடம் பேசினால் தங்கள் மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்துவதை எதிர்க்கட்சியினர் கேட்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நாடாளுமன்றம் ஒரு வார விடுமுறைக்கு பின்னர் வரவுசெலவுத்திட்டம் மீதான முக்கிய வாக்கெடுப்பு நடைபெறும். இந்த வாரம் பல விதமான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற சபை ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று தான் கருதுவதாக Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Sean Casey செய்தியாளர்களிடம் கூறினார்.

Related posts

முக்கிய சட்டமொன்றை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் Liberal களுடன் இணைந்த Conservative.

canadanews

கனேடிய நாடாளுமன்றத்திலிருந்தும் வெளியேறுகின்றார் Chrystia Freeland.

canadanews

இந்த ஆண்டு கனடா 2% NATO செலவின உறுதிமொழியை நிறைவேற்றும் என்று Carney உறுதியளிக்கிறார்.

canadanews