கனடா செய்திகள்

இலங்கையை சேர்ந்த Ottawa வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் குடிவரவுத் திணைக்களத்தின் உதவியை நாடுகின்றனர்.

கடந்த ஆண்டு Ottawa வில் நடந்த கொடூரமான கூட்டு கத்திக்குத்து தாக்குதலில் இலங்கையை சேர்ந்த ஒருவரின் மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது Ottawa வில் வசிக்கும் அவருடைய சகோதரனும் தந்தையும் குடியேற்ற சவால்களை எதிர்கொள்வதால், மத்திய அரசாங்கத்திடம் உதவி கேட்கின்றனர்.

March 2024 இல் Ottawa வில் உள்ள ஒரு Townhouse இல் Darshani Ekanayake, இரண்டு மாத குழந்தை உட்பட அவரது நான்கு குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்ப நண்பரான Gamini Amarakoon ஆகியோரைக் கொன்றதற்காக வியாழக்கிழமை குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், Febrio De-Zoysa விற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் குழந்தைகளின் தந்தையான Dhanushka Wickramasinghe காயங்களுடன் உயிர் தப்பினார். கருணை அடிப்படையில் நிரந்தர வதிவிடத்திற்கான அவரது விண்ணப்பம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர் கொள்கையளவில் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் அதன் பின்னர் அவர் அதைப் பற்றி எதுவும் கேள்விப்படவில்லை.

கொலைகளுக்குப் பின்னர் அவருக்கு உதவுவதற்காக கனடா வந்த அவரது சகோதரரும் தந்தையும், தங்களது நிரந்தர வதிவிட விண்ணப்ப கோரிக்கைகள் பற்றி இதுவரை எதுவும் கேள்விப்பட்டதில்லை.

Wickramasinghe வின் சகோதரரும் தொழில் செய்வதற்கான தனது தற்காலிக வதிவிட அனுமதிப்பத்திரத்தை நீடிக்கக் கோருகிறார், மேலும் அவரது மனைவி மற்றும் மகளுக்கு கனடாவுக்கு வர visitor விசாக்கள் மறுத்ததையும் அரசாங்கம் மறுபரிசீலனை செய்யுமாறு கோருகின்றார்.

Related posts

கனடா பொதுத் தேர்தல் 2025, தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியமைக்கும்- Liberal

canadanews

கனேடிய,வேலையின்மை விகிதம் 5.8% ஆக உயர்வு;

Editor

அடுத்த கட்சித் தலைவர் இருமொழி பேசுபவராக இருத்தல் அவசியம் என்று Liberal அதிகாரிகள் தெரிவிப்பு

admin