கனடா செய்திகள்

NDP இன் தலைமைக்கான போட்டிக்காக British Columbia வில் பேராதரவை பெறும் மாகாண முதல்வர் David Eby.

British Columbia வின் NDP கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளில் கிட்டத்தட்ட 83 சதவீதம் பேர் தலைமைத்துவ ஆலோசனையை கருத்தல் கொள்ளாது மாகாண முதல்வர் David Eby இற்கு தங்கள் ஆதரவைக் வெளிப்படுத்தினர்.

வாக்களித்த 740 பிரதிநிதிகளில், 609 பேர் Eby தலைமைத்துவத்தை மறுபரிசீலனை செய்யக் கோருவதைத் தவிர்த்தனர். British Columbia வின் வடக்கு கடற்கரையில் tanker கப்பல்கள் மீதான மத்தியரசின் தடை இங்கே நீடிக்கும் என்று கூறிய அதே வேளையில், மாநாட்டில் தனது தோற்றத்தைப் பயன்படுத்தி பல வளத் திட்டங்களை முன்னிலைப்படுத்த Eby நடவடிக்கை மேற்கொண்ட பின்னர் வாக்கெடுப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Eby தமது அரசாங்கம் தொடரும் பல இயற்கை வளத் திட்டங்களை மேற்கோள் காட்டி, British Columbia தனது இயற்கை வளங்களை எதிர்கால சந்ததிக்குரிய வலுவான பொது சேவைகளைத் தக்கவைக்க தேவையான செல்வமாக மாற்றும் என்று கூறுகிறார்.

வடமேற்கு British Columbia வில் சுரங்கம் மற்றும் LNG திட்டங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடக்கு கடற்கரை  Transmission Line  அவற்றில் அடங்கும், Eby இந்த திட்டத்தை “ஒரு நூற்றாண்டில் மிகப்பெரிய, மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளில் ஒன்று” என்று அழைக்கிறார்.

ஆனால் tanker கப்பல்களுக்கான தடையை நீக்குவது, அப்பகுதியில் உள்ள பல்வேறு வள திட்டங்களுக்காக First Nations மற்றும் வடக்கு சமூகங்களிடையே உள்ள ஆதரவு கூட்டணியில் பாதிப்பை என்றும் Eby கூறுகிறார்.

Related posts

இடைத்தேர்தல் முடிவுகள் Poilievre யின் அரசியல் வாழ்க்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடும்.

canadanews

அமெரிக்கா மீது சாதகமான பார்வை கொண்ட கனேடியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி.

canadanews

எல்லை கடக்கும் போது அதிகரித்து வரும் அமெரிக்காவின் சோதனைச் செயற்பாடுகள்.

canadanews