கனடா செய்திகள்

கனடாவுடனான உறவு மீளக்கட்டியெழுப்பட வேண்டும் என்கின்றனர் US செனட்டர்கள்.

அமெரிக்க அதிபர் Donald Trump கனடா மீது விதித்த வரிகள் கனடாவுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன என்பது தெளிவானது, ஆனால் அமெரிக்காவின் Maine ஐ சேர்ந்த ஒரு அமெரிக்க செனட்டர், கனேடியர்கள் தனிப்பட்ட முறையில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது குறித்து தான் அதிகம் கவலைப்படுவதாகக் கூறுகிறார்.

எல்லா அண்டை நாடுகளையும் போலவே, எப்போதும் பிரச்சினைகள் இருக்கும், அதேபோல எனக்குத் தெரிந்தவரை நாங்கள் மென்மையான மரக்கட்டைகளுக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்,” என்று சனிக்கிழமை Halifax இல் நடைபெற்ற ஒரு சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் செனட்டர் Angus King கூறினார்.

ஆனால் ஆழமான பிரச்சனைகள் கலாச்சார முறிவுகள் காரணமாக கனேடியர்கள் அமெரிக்கர்களை தங்கள் நண்பர்களாகவோ அல்லது அண்டை வீட்டாராகவோ நினைப்பதில்லை, மாறாக எதிரிகளாகவே நினைக்கிறார்கள் என்றார்.

அமெரிக்க செனட்டில் உள்ள இரண்டு சுயேச்சை உறுப்பினர்களில் ஒருவரான King, அமெரிக்கா இந்த அபத்தமான வரிகளை விதிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்று கூறுவதுடன், இதற்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவும் அமெரிக்காவும் வர்த்தகம் தொடர்பான மோதல்களின் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஜனநாயக நாடுகளின் பரந்த குடும்பத்தின் ஒரு பகுதியாகும் என்பதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என நினவூட்டினார்.

மற்றுமொரு செனட்டரான Kevin Cramer, கூறும்போது கனேடிய வணிகங்கள் மீது அதிக வரிகளை விதிக்க Trump அண்மையில் முடிவு செய்த போதிலும், ஏதாவது சரிசெய்ய முடியும் என்று தான் நம்புவதாக கூறுகிறார்.

“கனேடியர்களுடனான எங்கள் உறவு மிகவும் தனிப்பட்டது,” என்றும் அவர் கூறினார். “இதனை சரிசெய்வதற்கான சிறந்த வழி, பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி, வர்த்தகத்தில் எங்களைப் பிரிக்கும் விடயங்கள் குறித்து பேசுவதாகும். அத்துடன் இரு நாடுகளிலும் உள்ள மக்கள் மீண்டும் ஒன்றிணைய ஆர்வமாக உள்ளனர்.” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

பெல்ஜியத்தில் பணியாற்றும் போது கனேடிய ராணுவ வீரர் மருத்துவச் சிக்கல்களால் உயிரிழப்பு

admin

Markhamஇல் 44 வயதான ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொலை

Canadatamilnews

Automobiles நிறுவனங்கள் தங்களது தொழிலை வேறு இடங்களுக்கு மாற்ற மாட்டார்கள்: Anita

canadanews