கனடா செய்திகள்

இரும்பு மற்றும் மென்மரத் தொழில்களைப் பாதுகாப்பதற்காக மத்தியரசு விரைந்து நடவடிக்கை.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரால் பாதிக்கப்பட்டுள்ள கனேடிய இரும்பு உற்பத்தியாளர்கள் மற்றும் மென்மரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவி விரைவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trump நிர்வாகத்தின் 50 சதவீத வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள இரும்புத் தொழிலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் Mark Carney புதன்கிழமை அறிவிப்பார் என்று நம்பத்தகுந்த அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

கனடாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யக்கூடிய இரும்பின் அளவுக்கான எல்லைகளை குறைப்பதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்று கூறப்படுகிறது. அந்தத் தொகை 50 முதல் 20 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால் கனேடிய இரும்பு உற்பத்தியாளர்கள் சுமார் $854 மில்லியன் மதிப்புள்ள சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்வார்கள்.

கனடாவிற்குள் இரும்பு உற்பத்தியாளர்கள் மூலப்பொருளை கொண்டு செல்வதற்கான கப்பல் செலவுகளை 50 சதவீதம் குறைப்பதன் மூலம் இரும்பு உற்பத்தியாளர்களுக்கு உதவும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கனேடிய மென்மரக் கட்டைகளுக்கான வரிகள் முதலில் 35 சதவீதமாக இருந்தன, ஆனால் கடந்த மாதம் Trump அதை 45 சதவீதமாக உயர்த்தினார்.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனேடிய மரக் கட்டை Russia வை விட அதிக வரி விகிதத்தைக் கொண்டுள்ளது. நான் அதை அப்படியே விட்டுவிட விரும்புகிறேன், என்று British Columbia முதல்வர் David Eby, October 10 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Liberal கட்சியின் புதிய வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்ட Poilievre.

canadanews

Trudeau D-Day இன் 80 ஆவது நிறைவை France இன் Juno Beach இல் கொண்டாடவுள்ளார்

admin

பாலஸ்தீனியர்களுக்கான தற்காலிக விசா திட்டம் தொடர்பில் கனடா குடிவரவு அமைச்சர் வெளியிட்ட தகவல்.

Editor