British Columbia வின் வடக்கு கடற்கரையில் எண்ணெய் கப்பல்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் வரை, அங்கு ஒரு புதிய எண்ணெய் மணல் குழாய் இணைப்பை தொடங்குவது சாத்தியமற்றது, ஆனால் மத்தியரசு தடையை நீக்குவது தனியார் துறையை அத்தகைய திட்டத்திலிருந்து தடுக்கும் பல தடைகளில் ஒன்றை மட்டுமே நீக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உமிழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகளுடன் குழாய் இணைப்புக்கான ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில், மத்தியரசு மற்றும் Alberta அரசாங்கங்கள் வியாழக்கிழமை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அறிவிக்கத் தயாராக இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் 2019 முதல் சட்டமாக இருக்கும் கப்பல்கள் தடைக்கு விலக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Alberta அரசாங்கம், ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெயை எடுத்துச் செல்லக்கூடிய Alberta-British Columbia குழாய்த்திட்டத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை அறிவித்துள்ளது. வசந்த காலத்தில் Ottawa வின் புதிய Major Projects Office இற்கு விரைவான மதிப்பாய்வுக்காக விண்ணப்பத்தைத் தயாரிப்பதற்கான ஆரம்ப பணிகளுக்கு நிதியளிக்க $14 மில்லியனை உறுதியளித்துள்ளது, இது தனியார் துறையிடம் ஒப்படைக்க போதுமான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
எவ்வாறாயினும், இந்தத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு கனடாவில் குழாய் இணைப்புகளில் முதலீடு செய்வதற்கான முடிவிற்கு கணிக்கக்கூடிய அனுமதி, உள்ளூர் சமூகங்கள் மற்றும் பூர்வீக குடிகளின் ஆதரவு மற்றும் போட்டியான முதலீட்டுச் சூழல் போன்ற விடயங்கள் பிரதான விடயங்களாக இருக்கும் என்று நோக்கப்படுகிறது.
