கனடா செய்திகள்

கனடாவில் வேலை தேடுபவர்கள் அதிகமாக உள்ள போதும் பணியமர்த்தல் வீதம் அதிகரித்துள்ளது.

கனடா முழுவதும் உள்ள மால்களில் (Malls), மக்கள் சலுகைகளைத் தேடுகின்ற அதேநேரம், ஏனையவர்கள் வேலைகளைத் தேடுகிறார்கள்.வேலை தேடும் இணையத்தளமான Indeed இன் கூற்றுப்படி, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியை விட இந்த ஆண்டு விடுமுறை பணியமர்த்தல் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை விட இது சற்று முன்னேற்றத்தை காட்டுகிறது என்று Indeed மூத்த பொருளாதார நிபுணர் Brendon Bernard கூறினார், ஆனால் 2023 உடன் ஒப்பிடும்போது வேலைவாய்ப்பு பதிவுகள் இன்னும் குறைந்துள்ளதாகவும், Job market  வலுவாக இருந்த 2022 ஐ விட மிகவும் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு கடினமான காலமாக இருந்து வருகிறது என்று Bernard கூறுகின்றார். October மாத நிலவரப்படி, கனடாவின் வேலையின்மை விகிதம் 6.9 சதவீதமாகவும், 15 முதல் 24 வயதுடைய இளைஞர்களின் வேலையின்மை விகிதம் அதை விட இரு மடங்காக அதாவது 14.1 சதவீதமாக இருந்தது.

கனடாவில் வேலை தேடும் எவருக்கும் உரிய அறிவுரை என்னவென்றால், தொடர்ந்து விண்ணப்பித்துக்கொண்டே இருங்கள், எந்த வணிகத்திற்கும் நேரில் செல்லத் தயங்காதீர்கள் என்பதாகவே உள்ளது.

Related posts

பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh தெரிவிப்பு

admin

Mark Carney தொடங்கிய Net-Zero வங்கிக் கூட்டமைப்பு மூடுவதற்கு வாக்களித்துள்ளது.

canadanews

ஐ.நா.வின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பின் தலைவராக Bob Rae தேர்ந்தெடுக்கப்பட்டார்

admin