கனடா செய்திகள்

பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அதிகாரியின் அறிக்கையை மறுக்கின்றார் அமைச்சர்.

Ottawa வின் புதிய வீட்டுவசதி நிறுவனம் வீட்டுவசதி விநியோகத்தில் புதிதாக 26,000 அலகுகளைச் சேர்க்கும் என்று கணிக்கும் நாடாளுமன்ற வரவுசெலவுத்திட்ட அதிகாரியின் புதிய அறிக்கையை கனடாவின் வீட்டுவசதி அமைச்சர் எதிர்க்கிறார்.

பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அதிகாரி அலுவலகம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது, அந்த அறிக்கையில் திட்டமிடப்பட்ட Build Canada Homes (BCH) ஐந்து ஆண்டுகளில் 26,000 வீட்டு அலகுகளை இணைக்கும், அவற்றில் அண்ணளவாக 13,000 வீடுகள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கானதாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்கால பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அதிகாரி (PBO) Jason Jacques கூறுகையில், இது அவரது அலுவலகத்தின் அடிப்படைத் திட்டத்துடன் ஒப்பிடும்போது வீட்டுவசதி நிறைவுகளில் 2.1 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.

புதிய வீடுகளுக்கு நிதியளிக்கவும், விரைவாகக் கட்டியெழுப்பவும் உதவும் வகையில், மத்திய அரசு September மாதம் BCH ஐத் தொடங்கியது. அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு 500,000 வீடுகளைக் கட்டுவதற்காக வீட்டுவசதி கட்டுமானத்தின் வேகத்தை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக Ottawa மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

Via Rail நிறைவேற்று அதிகாரி January இல் பதவி விலகவுள்ளார் என்று போக்குவரத்து அமைச்சர் கூறுகிறார்.

canadanews

வியாழன் முதல் 4,100 Ontario convenience stores மது விற்பதற்கான உரிமம் பெற்றுள்ளன

admin

விளையாட்டுப் போட்டிகளுக்காகப் பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல வேண்டாம் எனப் பெற்றோருக்கு அறிவுறுத்தல்.

canadanews