பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Gary Anandasangaree, கனடாவின் குடியியல் துப்பாக்கிகளை ஒழுங்குபடுத்தல் தொடர்பில் மீளாய்விற்கு உட்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த மீளாய்வில், SKS துப்பாக்கி குறித்து பழங்குடிகளுடன் கலந்தாலோசிப்பதும் உள்ளடங்கும் என அவர் கூறியுள்ளார்.
அரைத்தானியங்கி SKS துப்பாக்கியைத் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படாத காரணத்தால், துப்பாக்கி கட்டுப்பாட்டு ஆதரவாளர்களால் அரசாங்கம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
SKS துப்பாக்கியானது பொதுவாக பழங்குடி சமூகங்களில் உணவுக்காக வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. எனினும், அண்மைக் காலங்களில் பொலிஸாரினால் கொலைகள் மற்றும் ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் இது பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அமைச்சர் Anandasangaree ஒரு செய்திக்குறிப்பில், இந்தக் குடியியல் மீளாய்வானது துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் மகசீன்கள் (magazines) ஆகியவற்றுக்கான சட்ட கட்டமைப்பை பரந்த அளவில் கருத்தில் கொள்ளும் என்றும், எளிமைக்கும் நிலைத்தன்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மீளாய்வு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Mass Casualty Commission இனால் முன்வைக்கப்பட்ட ஒரு பரிந்துரையினையும் நிறைவேற்றுகிறது.
அந்த ஆணைக்குழு April 2020 இல் கிராமப்புற Nova Scotia வில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை விசாரித்தது. அந்தச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி ஒருவரால் பல மணி நேரங்களில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
