கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் எதிர்காலம் தேக்க நிலையில் இருக்கும் தருணத்தில், பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை Washington இல் அமெரிக்க அதிபர் Donald Trump மற்றும் Mexico அதிபர் Claudia Sheinbaum ஆகியோரை சந்திக்க உள்ளார்.
Canada-U.S.-Mexico ஆகிய மூன்று நாடுகளுக்குமிடையிலான வர்த்தக ஒப்பந்தமான CUSMA அடுத்த ஆண்டு கட்டாய மீளாய்விற்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில், 2026 உலகக் கிண்ண போட்டியின் குலுக்கல் முறையிலான தெரிவு நிகழ்ச்சியில் மூன்று தலைவர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான உறவுகள் Trump பின் பரந்த வரிகளால் தலைகீழாக மாற்றப்பட்டாலும், கனடா மற்றும் Mexico ஆகியவை CUSMA உடன் இணக்கமான பொருட்களுக்கான விலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் சில பேரழிவு தரும் வரிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன.
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்குப் (NAFTA) பதிலாக, முன்னைய Trump நிர்வாகத்தின் போது இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது Trump இந்த ஒப்பந்தத்தை இதுவரை இல்லாத சிறந்த ஒப்பந்தம் என்று வர்ணித்தார்.
Trump மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதில் இருந்து, அவர் தனது போக்கை மாற்றியுள்ளார். வர்த்தக ஒப்பந்தம் அடுத்த ஆண்டு காலாவதியாகிறது என்று Trump புதன்கிழமை தெரிவித்தார்.
நாங்கள் அதனை காலாவதியாக விடுவோம் அல்லது Mexico மற்றும் கனடாவுடன் மற்றொரு ஒப்பந்தத்தைச் செய்ய முயற்சிப்போம், என்று Trump செய்தியாளர்களிடம் கூறினார்.
உலகக் கோப்பை நிகழ்வு நடைபெறும் Kennedy Center இல் அமெரிக்க ஜனாதிபதியுடன் Carney ஒரு குறுகிய நேர சந்திப்பை மேற்கொள்வார் என்று பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை Trump உடன் தான் ஒரு தனிப்பட்ட சந்திப்பை மேற்கொள்வேனா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று Sheinbaum புதன்கிழமை கூறினார்.
