கனடா செய்திகள்

Ontario வின் 29 பெரிய நகரங்களின் முதல்வர்கள், மாகாண அரசாங்கத்திற்கு அவசரநிலை பிரகடனம் செய்ய அழைப்பு!

Ontario வின் 29 பெரிய நகரங்களின் முதல்வர்கள், மாகாண அரசாங்கத்தை அவசரநிலை பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். இதற்கு அவர்கள், தங்கள் நகராட்சிகள் வீடற்ற தன்மை (homelessness), மனநலன் மற்றும் போதைப்பொருள் அடிமைத்தனம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள ஒரு “சமூகப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடி” ஆகியவற்றை எதிர்கொள்வதைக் காரணமாகக் கூறியுள்ளனர்.

Ontario பெரிய நகரங்களின் முதல்வர்கள் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில், மாகாணம் அதிக நிதி வழங்க வேண்டும் என்றும், நகரங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் மேலும் சுறுசுறுப்பாக ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. முதல்வர்களின் கூட்டமைப்பு கூறுகையில், 2024 இல் வீடற்றவர்கள் மற்றும் வீட்டுவசதி திட்டங்களுக்காக செலவிடப்பட்ட $4.1 பில்லியனில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக நகரசபைகள் ஈடுசெய்துள்ளன.

​இந்தக் கூட்டமைப்பின் தலைவர், Marianne Meed Ward இந்த விகிதத்தில் தொடர்ந்து நிதியளிப்பது நகரங்களுக்கு நீண்டகாலம் நிலைக்காது என்றும், அவை ஏற்கனவே நகரசபைகள் தமது இயலுமையை தாண்டி உதவி செய்துள்ளதாகவும் கூறுகிறார்.

வீடற்றோர் பிரச்சினையைக் கையாள்வது சொத்து வரிப் பணத்தைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும் அவர் கூறுகிறார், ஆனால் நகரசபைகள் இந்த வளங்களை அர்ப்பணித்து வருகின்றன, ஏனெனில் “சமூகத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளும் தலைவர்களாகிய நாம், அந்த மக்கள் தெருக்களில் கஷ்டப்பட அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.”

​நகராட்சி விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சரின் செய்தித் தொடர்பாளர், வீடற்றோருக்குப் பதிலளிக்கும் விதமாக மாகாணம் ஏற்கனவே பெரும் முதலீடுகளைச் செய்துள்ளதாகக் கூறுகிறார்.

​மேலும் நகர முதல்வர்கள் கூறுகையில், ​இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட Association of Municipalities of Ontario வின் அறிக்கையை மேற்கோள் காட்டி, அடுத்த 10 ஆண்டுகளில் வீடற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வர $11 பில்லியன் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக கூறினர்.

​இது ஒரு வளர்ந்து வரும் நெருக்கடி என்று Toronto துணை முதல்வர் Paul Ainslie கூறினார். மாகாண அரசாங்கத்திடம் இருந்து சில உதவிகளை பெற்றாலும், அது போதாது. நகரசபைகளால் இதைத் தனியாகத் தீர்க்க முடியாது என்று கூறினார்.

Related posts

தெற்கு Ontario இன் Toronto பகுதியில் ஜூலையில் ஏற்ப்பட்ட திடீர் வெள்ளம் $940M காப்பீடு செய்யப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியுள்ளது

admin

Poland இற்குள் Russia ஆளில்லா விமான ஊடுருவல் NATO உடனான யுத்தத்தை தூண்டுமா?

canadanews

பெரும்பான்மையை வென்ற New Brunswick Liberals, Susan Holt: மாகாணத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி

Canadatamilnews