NDP நாடாளுமன்ற உறுப்பினர் Jenny Kwan பாதுகாப்புத் துறை தொடர்பான ஏற்றுமதிகளின் மேற்பார்வையை அதிகரிப்பதற்கான தனது மசோதாவை ஆதரிப்பதில் இருந்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தடுக்கும் முயற்சியாக Liberal களால் கொண்டு வரப்பட்ட internal Liberal caucus document ஓர் பயமுறுத்தும் முயற்சி என்று நிராகரித்துள்ளார்.
”உண்மையில், இது Liberal உறுப்பினர்களைக் குழப்புவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று Kwan கூறினார், அந்த விளக்கமளிப்பு ஆவணத்தை முற்றிலும் தவறான தகவல் என்றும் அவர் விவரித்தார்.
கசிந்த தகவல்களின் அடிப்படையில் அந்த விளக்கமளிப்பு ஆவணமானது, Kwan இனால் முன்வைக்கப்பட்ட மசோதா கனடாவின் பாதுகாப்புத் துறையை சிதைக்கும் என்றும் அமெரிக்காவுடனான பாதுகாப்புத் துறை வர்த்தகத்தை சீர்குலைக்கும் எனவும் பழிவாங்கலுக்கு வழிவகுக்கும் என்றும் கூட மிகைப்படுத்தி கூறுகிறது.
மேலும், இந்தச் சட்டம் NATO வில் கனடாவின் பங்கைத் தடுக்கும், இராணுவத்தின் செயல்பாட்டுத் திறனுக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் Ukraine இற்கான உதவியைக் கூட தாமதப்படுத்தும் என்றும் அந்த ஆவணம் பரிந்துரைக்கிறது.
ஆனால், Kwan இன் இந்த மசோதா கனடாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியுடன் மற்றுமொரு மோதலைத் தூண்டுவதோடு, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையைப் பலவீனப்படுத்தும் என்றும் Liberal மற்றும் Conservatives ஆகிய இரு கட்சிகளும் வாதிடுகின்றன.
கனடாவின் பாதுகாப்புச் சார்ந்த ஏற்றுமதிகளில் பெரும்பகுதி, எல்லைக்குத் தெற்கே அமெரிக்காவிற்கு உதிரிப் பாகங்கள் வடிவிலேயே அனுப்பப்படுவதாக Liberal கட்சியின் விளக்கக் குறிப்பு எச்சரிக்கிறது. மேலும், Kwan முன்மொழிந்துள்ள கட்டுப்பாடுகள் கிட்டத்தட்ட நிச்சயமாக வர்த்தகத்தைச் சீர்குலைப்பதுடன், தூதரக உறவுகளிலும் விரிசலை ஏற்படுத்தும்’ என்றும் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
இதனிடையே இராணுவத் தளபாடங்களுக்கான கனடாவின் ஏற்றுமதி விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்ய Liberal அரசாங்கம் பரிசீலிக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, உலகில் மிகக் கடுமையான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று என்று வெளியுறவுத் துறை அமைச்சர் Anita Anand வலியுறுத்திக் கூறினார்.
