Liberal அரசாங்கத்தின் Alberta உடனான குழாய்வழி ஒப்பந்தம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரதான பேசு பொருளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் Ottawa மற்றும் Alberta விற்கு இடையில் கையெழுத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு அரசாங்கங்களும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மத்தியரசில் அங்கம் வகிக்கும் Conservative கள் பிரதமர் Mark Carney யின் குழாய் இணைப்பிற்கான உறுதிமொழியைச் சோதனைக்குட்படுத்த விரும்புகிறார்கள். இதனடிப்படையிலேயே Liberal கள் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதியளித்த வார்த்தைகளின் பின்னால் ஒன்றிணைய வேண்டும், என்று Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் எதிர்பார்க்கப்படும் ஒரு Conservative களின் எதிர்ப்பின் தீர்மானம், Poilievre இனால் online இல் பகிரப்பட்டது. அது Ottawa மற்றும் Alberta விற்கு இடையிலான ஒப்பந்தத்தின் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு உட்படுத்தும் என்பதைக் காட்டுகிறது.
இது Liberal களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கப் போகிறது. அவர்கள் Alberta உடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இது என்பதால், அவர்கள் இந்த வாக்கெடுப்பைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
