கனடா செய்திகள்

நாடுகடந்த திருட்டுக் குழுக்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் Ottawa பொலிஸார்.

கனடா பாதுகாப்புபடையினர் தென் அமெரிக்க திருட்டுக் குழுக்கள் (SATGs) இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக OPS தெரிவித்துள்ளது. இவை ஒழுங்கமைக்கப்பட்ட “குற்றச் சுற்றுலாப் பயணிகள்” என்று வரையறுக்கப்படுகின்றன.

​இந்தக் குழுக்கள் கனடாவிற்குள் குறுகிய காலத்திற்கு சட்டப்பூர்வமாக நுழைந்து, தற்போது குடியிருப்பு மற்றும் சில்லறை வர்த்தக உடைப்பு ஆகிய திருட்டுகளில் ஈடுபடுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தச் சிறிய, நடமாடும் குழுக்கள் Ontario, Quebec, British Columbia மற்றும் Alberta ஆகிய மாகாணங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. Ottawa வின் GTA, Montreal, Vancouver மற்றும் Calgary ஆகிய இடங்களில் அண்மையில் நடந்த விசாரணைகள் மற்றும் கைதுகளில் அநேகமானவை அதிக மதிப்புள்ள உடைப்பு திருட்டுகளை கொண்டவை என்பதுடன் இவை தென் அமெரிக்க திருட்டுக் குழுக்களின் பாணியுடன் ஒத்தவையாகவும் உள்ளன.

இந்தக் குழுக்கள் நகைகள், கைக்கடிகாரங்கள், பணம், உயர்தர வடிவமைப்பு கலைகளுடன் தொடர்புடைய பொருட்கள் போன்ற அதிக மதிப்புள்ள பொருட்களை குறிவைப்பதாகக் கூறப்படுகிறது. திருடப்பட்ட இந்தப் பொருட்கள் உடனடியாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன அல்லது மிக விரைவாக மீள விற்பனை செய்யப்படுகின்றன.

OPS மேலும் கூறுகையில், greenbelt அல்லது பூங்காக்களுக்குப் பின்னால் உள்ள வீடுகள் அதிக ஆபத்தில் உள்ளன. விடுமுறையில் இருக்கும்போது, நம்பகமான அண்டை வீட்டார் உங்கள் வீட்டைக் கவனித்துக் கொள்ளும்படி குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும், குடியிருப்பாளர்கள் அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களைப் பூட்டுமாறும், motion-sensor lighting நிறுவுமாறும் வலியுறுத்தப்படுகிறார்கள். கதவில் பொருத்தப்படும் கமராக்களும் (Doorbell cameras) ஒரு நல்ல வழி என்று பொலிஸார் தெரிவிக்கிறனர்.

Related posts

சர்வதேச மாணவர்களின் சேர்க்கை federal cap இனை விட குறைவாக உள்ளது: Canada’s Universities

admin

அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தீவிரமாக செயற்படும் கனடா.

canadanews

Ottawa அதன் தூதரகத்தை முழுமையாகப் பணியமர்த்த முடியும் என்ற Anand இன் கூற்றை இந்தியத் தூதுவர் மறுக்கிறார்.

canadanews