கனடா செய்திகள்

கனேடிய நாடாளுமன்றத்திலிருந்தும் வெளியேறுகின்றார் Chrystia Freeland.

Ukraine அதிபர் Volodymyr Zelenskyy கனடாவின் முன்னாள் அமைச்சரும், துணைப் பிரதமருமான Chrystia Freeland ஐ பொருளாதார மேம்பாட்டு ஆலோசகராக நியமித்துள்ளதாக அறிவித்த சில மணிநேரங்களிலேய வரும் வாரங்களில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

​கடந்த September மாதம், Ukraine மறுசீரமைப்பிற்கான கனடாவின் சிறப்புப் பிரதிநிதியாக Freeland நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில், இந்தப் புதிய பொறுப்பை ஏற்பதற்காக போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் என்ற தனது அமைச்சரவைப் பதவியிலிருந்து அவர் விலகினார். இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து நீடிப்பார் என்று அப்போது கூறப்பட்டிருந்தது.

இதனிடையே அவர் திங்களன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், Ukraine அதிபருக்கான தனது புதிய தன்னார்வப் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, சிறப்புப் பிரதிநிதி பதவியிலிருந்தும் தாம் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பதவி முழுநேரப் பணி அல்ல என்றும், இதற்கு ஊதியம் கிடையாது என்றும் அந்த வட்டாரம் தெரிவிக்கிறது. Ukraine மறுசீரமைப்பு குறித்த ஒரு சர்வதேச ஆலோசனைக் குழுவை Freeland ஒருங்கிணைக்க வேண்டும் என்று Zelenskyy விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனிய வம்சாவளியைச் சேர்ந்தவரான Freeland அரசியலில் நுழைவதற்கு முன்னர் இரண்டு தசாப்தங்களாகப் பத்திரிகையாளராகப் பணியாற்றிய காலத்தில் அவர் Ukraine மற்றும் Russia ஆகிய இரு நாடுகளிலும் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய அரசு மீண்டும் புதிய வரவுசெலவுத் திட்டத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர்கள் கோரிக்கை

Canadatamilnews

Ontario வின் வரி எதிர்ப்பு விளம்பரங்களைத் தொடர்ந்து கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக Trump அறிவித்துள்ளார்.

canadanews

Toronto இல் உணவு வங்கி பயன்பாடு முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது

admin