Dalhousie University யின் புதிய முன்னறிவிப்பு ஒன்றின்படி, கடந்த ஆண்டில் கனடா முழுவதும் 7,000 உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், 2026-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4,000 உணவகங்கள் மூடப்படக்கூடும் என்றும், இதில் Ontario மாகாணம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த துறையின் வரவு-செலவு ஆகிய இரு பக்கங்களிலும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.இது குறித்து Dalhousie University பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான Sylvain Charlebois கூறுகையில், உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் தொழிலாளர் சம்பளம் ஆகியவற்றை நாம் கவனிக்க வேண்டும். அதோடு, தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர் திட்டத்தில் (Temporary Foreign Workers Program) செய்யப்பட்டுள்ள மாற்றங்களும் பல உணவக உரிமையாளர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன,” என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 சதவீத விலை உயர்வை எதிர்கொள்ளும் உணவக உரிமையாளர்கள். இது சாதாரணமானது என்றும். அதே சமயம், வாடிக்கையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் சுமையை அவர்கள் மீது சுமத்தவும் முடியாது என்று கூறுகின்றனர்.
ஏனைய மாகாணங்களை விட Ontario அதிகமான பிரச்சினையை எதிர்கொள்கிறது, ஏனெனில் கனடாவிலேயே அதிக எண்ணிக்கையிலான உணவகங்கள் இந்த மாகாணத்தில்தான் அமைந்துள்ளன, என்று ORHMA அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி Tony Elenis தெரிவித்தார்.
அரசாங்கங்கள் இதில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள தொழில் அமைப்புகள், வரும் ஆண்டில் இன்னும் அதிகமான உணவகங்கள் மறைந்து போகக்கூடும் என்றும் எச்சரிக்கின்றன.
