கனடா செய்திகள்

வரவிருக்கும் CUSMA மீளாய்வு குறித்த எச்சரிக்கையாகவே Trump இன் கருத்துக்கள் வெளிவருகின்றன – Carney.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் அண்மைய வரி விதிப்பு அச்சுறுத்தல், வட அமெரிக்காவின் முக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக வெளிவந்தது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல என்று பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.

​ஜனாதிபதி ஒரு வலிமையான பேச்சுவார்த்தையாளர் அவருடைய இந்தக் கருத்துக்களும் நிலைப்பாடுகளும் அந்த பரந்த பின்னணியிலேயே பார்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று Ottawa வில் திங்களன்று நடைபெற்ற வேறொரு அறிவிப்பின் போது Carney கூறினார்.

​இதனிடையே வார இறுதியில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், பிரதமரை “ஆளுநர்” என்று குறிப்பிட்ட Trump, சீனாவுடன் Ottawa வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனேடியப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளார்.

தற்போது Canada, Mexico மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தின் கட்டாய மீளாய்விற்கு தயாராகி வரும் நிலையில், அதன் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. இம்மாத தொடக்கத்தில் Trump பேசுகையில், இந்த வர்த்தக ஒப்பந்தம் தமக்கு “தொடர்பற்ற ஒன்று” என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CUSMA ஒப்பந்தமானது,Trump இன் கடுமையான வரி விதிப்புகளின் பாதிப்புகளிலிருந்து கனடாவையும் Mexico வையும் பாதுகாத்துள்ளது. எல்லை வழியாகக் கடத்தப்படும் அபாயகரமான fentanyl போதைப்பொருள் விவகாரத்தைக் காரணங்காட்டி, கடந்த August மாதம் கனடா மீதான வரிகளை ஜனாதிபதி 35 சதவீதமாக உயர்த்தினார். ஆயினும், CUSMA ஒப்பந்தத்திற்கு உட்பட்ட பொருட்களுக்கு இந்த வரிகள் பொருந்தாது.

வரி விதிப்பிலிருந்து விலக்கு பெறுவதற்கான Ottawa வின் முயற்சிகள் கடந்த October மாதத்தில் முடங்கின. வரி விதிப்புகளை விமர்சித்து முன்னாள் ஜனாதிபதி Ronald Reagan பேசியதை மேற்கோள் காட்டி, Ottawa அரசாங்கம் வெளியிட்ட விளம்பரத்தால் Trump கோபமடைந்ததே இதற்கு காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடா உச்ச நீதிமன்றத்தில் ஏற்படவிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பிரதமர் நடவடிக்கை.

canadanews

Gaza வில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு கனடாவும் அழுத்தம் கொடுக்கிறது.

canadanews

வெள்ளைமாளிகையில் வைத்து எச்சரிக்கப்பட்டனரா கனேடிய முதல்வர்கள்?

canadanews