கனடா செய்திகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாருடனான சந்திப்பின் போது வர்த்தக உறவு குறித்து விவாதிக்கவில்லை – Anita Anand

அமெரிக்காவின் Washington நகரில் அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலார் Marco Rubio உடனான அண்மைய சந்திப்பின் போது, கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பரந்த வர்த்தக உறவு குறித்து தாம் விவாதிக்கவில்லை என்று கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Anita Anand தெரிவித்துள்ளார்.

​CUSMA ஒப்பந்தம் தொடர வேண்டும் என்பது தொடர்பாக Rubio வினால் ஏதேனும் உறுதிமொழி வழங்கப்பட்டதா? என்ற செய்தி நினுவனமொன்றின் கேள்வியின் போதே Anand இவ்வாறு பதிலளித்தார்.

​இந்த வார தொடக்கத்தில் Rubio நடத்திய முக்கியமான கனிமங்கள் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் Washington சென்றிருந்தார். இதன்போது, இரு நாடுகளும் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகள் குறித்த உரையாடலை முன்னெடுத்து வருவதாக Anand குறிப்பிட்டார்.

இதனிடையே, Greenland ஐ கைப்பற்றும் Trump இன் எண்ணத்தை அவர் நம்புகிறாரா என்று கேட்கப்பட்டபோது, Anita Anand அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல், ​”நாங்கள் நிலைமையை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகிறோம் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்,” என்று கூறிய அவர், “இங்கே ஒரு தூதரகத்தைத் திறக்கும் எண்ணம் எங்களுக்கு எப்போதுமே இருந்தது. Greenland மக்கள் கவலையுடனும் பதற்றத்துடனும் இருக்கும் இந்தச் சூழலில், அவர்களுடன் இங்கே இருக்க முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நான் இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” எனவும் கூறினார்.

பல்வேறு வழிகளிலும் அமெரிக்காவுடனான உறவுகளைத் தொடர்ந்து கட்டியெழுப்ப நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று கூறிய Anand, கனடா “Greenland மக்களுடன் உறுதியாக நிற்கிறது” என்றும் குறிப்பிட்டார். கனடாவின் ஆர்க்டிக் வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக, Trump இன் அச்சுறுத்தல்களுக்கு முன்னரே Greenland இல் தூதரகம் திறப்பதற்கான திட்டங்கள் நன்கு முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும், இதுவரை நிரந்தர தூதுவர் எவரும் நியமிக்கப்படவில்லை.

Related posts

அமெரிக்காவினால் வரிகளை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இடம்பெறவில்லை

canadanews

Trump இன் சமீபத்திய கருத்துக்களைத் தொடர்ந்து தாங்கள் ஒருபோதும் 51வது மாநிலமாக இருக்க முடியாது என்று Premier Ford தெரிவிப்பு

admin

Gaza எல்லை அருகே கத்தியை கொண்டு மிரட்டியதால் கனேடியர் ஒருவர் கொலை : Israeli பொலீசார்

admin