சனிக்கிழமை Woodbine Mall வாகனத்தரிப்பிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 37 வயதுடைய நபர் சந்தகுமார் ராஜா நந்தகுமார் என Toronto பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மாலை 3:30 மணியளவில் Etobicoke இல் உள்ள Rexdale பகுதிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் Brampton இல் வசிப்பவரான சந்தகுமார் ராஜா நந்தகுமாரைக் கண்டனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட போதும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் வாகனத்தில் தப்பிச் சென்றதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர், ஆனால் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவ இடத்திலிருந்து கிடைத்த காட்சிகள், பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற காரையும், தரையில் அடையாளமிடப்பட்ட ஆதாரக் குறிகளையும் காட்டுகின்றன.
இது 2026 ஆம் ஆண்டில் Toronto வில் நிகழ்ந்த மூன்றாவது கொலைச் சம்பவமாகும்.
