கனடா செய்திகள்

Windsor மற்றும் Detroit இடையே கட்டப்பட்டுள்ள புதிய பாலம் திறக்கப்படுவதைத் தடுக்கப்போவதாகTrump அச்சுறுத்தல்.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, கனடாவால் அமெரிக்காவிற்கு வழங்க வேண்டிய அனைத்தையும் முழுமையாக ஈடுசெய்யும் வரை, Ontario வின் Windsor மற்றும் Detroit, Michigan இடையே புதிய பாலம் திறக்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன் என்று அச்சுறுத்தியுள்ளார்.

​திங்களன்று ஒரு சமூக ஊடகப் பதிவில் Trump, கனடா அமெரிக்காவைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும், “அமெரிக்கச் சந்தையினால் ஈட்டப்படும் வருவாய் வானளாவிய அளவில் இருக்கும் என்பதால்,” அந்தப் பாலத்தில் குறைந்தது பாதியையாவது அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவிற்கு என்ன கிடைக்கிறது ஒன்றுமே இல்லை! Ontario மதுபானக் கடைகளில் அமெரிக்க மதுபானங்கள் மற்றும் ஏனைய மது தயாரிப்புகளை வைக்கக்கூட அனுமதிப்பதில்லை,” என்று Trump விசனம் வெளியிட்டார்.

இந்தப் பாலத்தினுடைய கனடா மற்றும் அமெரிக்கப் பக்கங்கள் இரண்டையும் கனடாவே சொந்தமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், இந்தப் பாலம் கனடா மற்றும் Michigan மாநிலம் ஆகிய இரண்டிற்கும் பொதுவான சொத்தாகும். கனடா இந்தத் திட்டம் முழுவதிற்கும் நிதியளித்துள்ளதுடன், அந்தச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக toll கட்டண வருவாயைப் பயன்படுத்த உள்ளது.

Related posts

பல் மருத்துவர்களை அதிகரிக்கும் வகையில் பல் பராமரிப்பு மாற்றங்களை செய்ய வேண்டும் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

admin

கனடாவில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அறிமுகமாகிறது புதிய சட்டங்கள்.

canadanews

எரிபொருள் விலை உயர்வால் கனடாவின் பணவீக்கம் 3.2% ஆக உயர்ந்தது.

canadanews