கனடா செய்திகள்

கடுமையான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டோர் அகதி அந்தஸ்து கோருவதில் சிக்கல்.!

கடுமையான குற்றங்களுக்காக தண்டனை பெற்ற வெளிநாட்டவர்கள் அகதி அந்தஸ்து கோருவதைத் தடுப்பதற்கான தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய Conservatives கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

​அத்துடன், நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் புகலிடம் கோருவதைத் தடுக்குமாறும் இந்தத் தீர்மானம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

​Conservatives கட்சித் தலைவர் Pierre Poilievre திங்களன்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், “கடுமையான குற்றங்களை புரியும் வெளிநாட்டவர்களை கட்டாயமாக நாம் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


British Columbia மாகாண முதல்வர் David Eby மற்றும் பல முக்கிய நகரங்களின் நகர முதல்வர்களும், தங்கள் மாகாணங்களிலும் ஏனைய இடங்களிலும் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற சம்பவங்களையடுத்து, புகலிடம் கோருவதில் உள்ள நடைமுறைகளை கடுமையாக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Calgary யில் அண்மையில் நடைபெற்ற Conservatives கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், குடிவரவு மற்றும் நீதி அமைப்புகளில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர அழைப்பு விடுத்தனர். அத்துடன், கனேடிய வரி செலுத்துவோர் வெளிநாட்டுப் பிரஜைகளின் மறுவாழ்வுக்காக பணம் செலவழிக்கக் கூடாது எனும் கொள்கை முன்மொழிவுக்கு ஆதரவாகவும் அவர்கள் வாக்களித்தனர்.

Related posts

TTC பேருந்து விபத்தின் சந்தேக நபரான தமிழ் இளைஞர் திருட்டு சம்பவங்களுடனும் தொடர்பு?

canadanews

மீண்டும் ஆரம்பிக்கிறது Canada Post மற்றும் தொழிற்சங்கத்திற்கிடையிலான பேச்சுவார்த்தை.

canadanews

வாக்களிப்பின்போது பென்சில் அல்லது பேனாவை பயன்படுத்த முடியும் – Elections Canada.

canadanews