2010-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பலமுறை முடங்கியுள்ள போதிலும், ஓராண்டுக்குள் New Delhi உடன் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்திட முடியும் என்று Ottawa விற்கான இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் Mark Carney இன் எதிர்பார்க்கப்படும் இந்தியப் பயணத்திற்கு முன்னதாக, உயர்ஸ்தானிகர் Dinesh Patnaik வியாழக்கிழமை கூறுகையில், “மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் உள்ளதால், 12 மாத காலக்கெடு என்பது ஒன்றும் மிகையான இலக்கல்ல” என்று குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் மிக விரைவாக நடக்கும் என்று கூறிய Patnaik, Carney யின் இந்தியப் பயணத்தின் போது, New Delhi மற்றும் Mumbai இல் உள்ள பல்வேறு அரசு மற்றும் வணிக அதிகாரிகளுடன் சந்திப்புகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
கடந்த November மாதம், பிரதமர் Mark Carney யும் இந்தியப் பிரதமர் Narendra Modi உம் ஒரு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் எரிசக்தி, காலநிலை மாற்றம் முதல் உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் விவசாயம் வரையிலான பல்வேறு விவகாரங்களில் இந்தியாவும் கனடாவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதையும் Patnaik இதன்போது சுட்டிக்காட்டினார்.
