கடந்த ஆண்டு மத்திய அரசு வழங்கிய “tax holiday” முடிவுக்கு வந்தது, இது வருடாந்த விலை ஒப்பீடுகளின் வேகத்தைக் குறைக்க உதவியுள்ளது. இதன் காரணமாக, February மாத பணவீக்க விகிதம் இரண்டு சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளதாகப் Statistics Canada தெரிவித்துள்ளது.
February மாதத்தின் பணவீக்கம் ஆண்டு ரீதியாக 1.8 சதவீதமாக பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இது January மாத புள்ளிவிவரத்தை விட அரை சதவீத புள்ளி குறைவாகும் என்பதோடு, பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்புகளை விடவும் சற்று குறைவாகவே உள்ளது.
பணவீக்கத்தின் ஒட்டுமொத்த விகிதம் குறைவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, கடந்த ஆண்டு மத்திய அரசு வழங்கிய Tax holiday முடிவுக்கு வந்ததே ஆகும். இந்த வரிச் சலுகையின் மூலம், வீட்டுத் தேவைக்கான அடிப்படைப் பொருட்கள் மற்றும் உணவகக் கட்டணங்கள் ஆகியவற்றிலிருந்து Federal sales tax நீக்கப்பட்டிருந்தது. இது 2025 February நடுப்பகுதி வரையிலான இரண்டு மாத காலத்திற்கு அமுலில் இருந்தது.
கடந்த ஆண்டு January மாதம் முழுவதும் இந்த வரிச் சலுகை நடைமுறையில் இருந்தது. ஆனால் February மாதத்தில் நடுப்பகுதி மட்டுமே இந்தச் சலுகை நீடித்தது. இதனால், கடந்த ஆண்டு February மாத விலைகளுடன் இந்த ஆண்டு February மாதத்தை ஒப்பிடும்போது, வருடாந்த பணவீக்கம் சற்று குறைவாக தெரிந்தது.
மறுபுறம், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயரத் தொடங்கியுள்ளது. இது கடந்த February மாத இறுதியில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி, அண்மைய வாரங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விலையை மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளதாக Statistics Canada தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடிகள் வரும் மாதங்களில் ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதத்தை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று பல பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். Bank of Canada வரும் புதன்கிழமை வட்டி விகிதம் குறித்த முடிவை அறிவிக்கவுள்ள நிலையில், அண்மைக்கால விலை நிலவரங்களை மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
