கனடா செய்திகள்

Artemis II நிலவுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை முடித்த கனேடிய விண்வெளி வீரருடன் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

Artemis II நிலவுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை முடித்த பின்னர், தற்போதும் விண்கலத்தில் உள்ள கனேடிய விண்வெளி வீரர் Jeremy Hansen உடன் விண்வெளித் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (Space Communication) மூலம் பிரதமர் Mark Carney இன்று உரையாற்றவுள்ளார்.

​Canadian Space Agency யின் ஊடக குறிப்பில் தொழில்துறை அமைச்சர் Mélanie Joly யும் இதில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று, Hansen மற்றும் அவரது மூன்று அமெரிக்க சக விண்வெளி வீரர்களும் ஆறு மணி நேர நிலவுப் பயணத்தை நிறைவு செய்தனர். இதன் மூலம் 1970-ஆம் ஆண்டின் Apollo 13 விண்கலத்தின் சாதனையை முறியடித்து, விண்வெளியில் இதுவரை மனிதர்கள் சென்றிராத மிக நீண்ட தூரத்தைக் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். எனினும், இதுவரை விண்கலம் தரை இறங்கவில்லை.

​வெறும் இரண்டே ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மனிதர்களைத் தரை இறக்குவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தப் பயணம் கருதப்படுகிறது.

Artemis II திட்டத்தின் மூலம், நிலவுக்கான விண்வெளிப் பயணத்திற்கு ஒரு விண்வெளி வீரரை அனுப்பிய உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையை கனடா பெற்றுள்ளதாக Carney தெரிவித்துள்ளார். மேலும், இது Hansen இன் அசாதாரணமான திறமைக்கு ஓர் சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​நிலவின் படங்கள் மற்றும் ஏனைய புவியியல் அவதானிப்புகளைப் பதிவு செய்த பின்னர், இந்த விண்வெளி வீரர்கள் குழு வரும் வெள்ளிக்கிழமை California கடற்கரைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் இறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

கனடாவில் குண்டுப் பீதியை ஏற்படுத்தியவர் வெளிநாடொன்றில் கைது.

Canadatamilnews

தென்னாப்பிரிக்காவின் ICJ வழக்கை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பிரதமர் Trudeau !

Editor

கனேடியச் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவையை சீனா இரத்து செய்துள்ளது.

canadanews