ஐந்து மாதங்களுக்குள் ஐந்தாவது நபர் கட்சி மாறிய செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மிகுந்த உற்சாகத்துடன் ஆயிரக்கணக்கான Liberal கட்சியினர் தங்களது வருடாந்த மாநாட்டிற்காக Montreal இல் கூடுகின்றனர்.
2026 Montreal மாநாடு கட்சியின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிப்பதற்கான ஒரு வாய்ப்பாக விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த மூன்று நாள் மாநாடு, கொள்கை முடிவுகளை விட வரவிருக்கும் மூன்று முக்கியமான இடைத்தேர்தல்களுக்கு முன்னதாகக் கட்சியின் வேகத்தை அதிகரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தும் என்று Liberal கள் எதிர்பார்க்கின்றனர்.
கட்சி மாறிய இருவர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். முன்னாள் NDP நாடாளுமன்ற உறுப்பினர் Lori Idlout “பழங்குடியின மக்களுடன் கூட்டாண்மை நல்லிணக்கத்தின் பகிரப்பட்ட பாதை” என்ற தலைப்பில் மாநாட்டில் உரையாற்றுவார். அதேசமயம், முன்னாள் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Matt Jeneroux “கனடாவின் கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் பன்முகப்படுத்துதல்” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
Liberal களின் முன்னைய மாநாடுகளில் முன்வைக்கப்பட்ட கொள்கைகளைப் போலன்றி இம்முறை தற்போதைய பொருளாதாரச் சவால்கள் மற்றும் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் விலைவாசி போன்ற கொள்கைகள் மூலமாக மக்களின் பிரச்சினைகளை உண்மையாகவே பிரதிபலிக்கின்றன என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
அடிமட்ட அளவிலான இந்தக் கொள்கை உருவாக்கும் செயற்பாட்டில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அழைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
