கனடா செய்திகள்

Finland அதிபர் மற்றும் கனேடியப் பிரதமருக்கு இடையிலான சந்திப்பு இந்த வாரம் Ottawa வில் நடைபெறவுள்ளது.

இந்த வார இறுதியில் Ottawa வில் பிரதமர் Mark Carney மற்றும் Finland அதிபர் Alexander Stubb ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு சந்திப்பாக இது அமையும்.

​அதிபர் Stubb செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் Ottawa வில் தங்கியிருப்பார் என்றும், அங்கு அவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பார்கள் என்றும் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, முக்கிய கனிமங்கள், AI மற்றும் Quantum தொழில்துறை சார்ந்த ஒத்துழைப்புகள் குறித்து அவர்கள் விவாதிக்க உள்ளனர்.

பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் கனடா மற்றும் Finland இடையே மிகவும் வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவு உள்ளது, என்று Mark Carney ஒரு ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

​கடந்த மாதம் Finland பிரதமர் Petteri Orpo உள்ளிட்ட Nordic நாடுகளின் தலைவர்களை பிரதமர் Mark Carney சந்தித்திருந்தார். அப்போது ஆட்டிக் பகுதி மற்றும் அவர்களது பொருளாதாரங்களைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக அவர்கள் உறுதியளித்தனர்.

​இந்நிலையில், தற்போது அதிகரித்து வரும் ஆபத்தான மற்றும் நிச்சயமற்ற உலகில், எம்மால் எவற்றைக் கட்டுப்படுத்த முடியுமோ அவற்றில் கனடா கவனம் செலுத்துகிறது. அதாவது எமது வர்த்தகத்தை பன்முகப்படுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் நம்பகமான நட்பு நாடுகளுடன் எமது உறவுகளை ஆழப்படுத்துவது, என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Ontario முழுவதிலும் உள்ள LCBO கடைகள் இன்று மீண்டும் திறக்கப்படும்

admin

அடுத்த ஆண்டில் வரவுசெலவுத்திட்டத்தினூடாக குடியேற்றத்திட்டங்களை மாற்றுகின்றது கனடா.

canadanews

கனடாவின் வருடாந்திர புதைபடிவ எரிபொருள் வெளியேற்றத்தை விட 2023 காட்டுத்தீ உமிழ்வுகள் நான்கு மடங்கு அதிகம்

admin