Uncategorizedகனடா செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் வரி இடைநிறுத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

Ottawa எரிபொருளுக்கான தற்காலிக வரி இடைநிறுத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இதன் மூலம் கனேடியர்கள் சாதாரண ரக பெட்ரோல் லீட்டருக்கு 10 சதங்களும், டீசல் லீட்டருக்கு 4 சதங்களும் சேமிக்க வாய்ப்புள்ளது.

​பிரதமர் Mark Carney கடந்த வாரம் இந்த கலால் வரி இடைநிறுத்தத்தை அறிவித்திருந்தார். இது தொழிலாளர் தினம் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

​எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு விவேகமான வழி இதுவென்றும், இதற்காக சுமார் 2.4 பில்லியன் டாெலர்கள் செலவாகும் என்றும் Liberal கட்சியினர் கூறுகின்றனர்.

உயர்ந்து வரும் எரிசக்திச் செலவுகளைச் சமாளிக்க இந்த நடவடிக்கை போதுமானதல்ல என்று கூறும் Conservatives கட்சியினர், இந்த வரி இடைநிறுத்தத்தை ஆண்டு இறுதிவரை நீட்டிக்க வேண்டும் என்றும், அத்துடன் தூய எரிபொருள் தரநிலைகள் மற்றும் தொழில்ரீதியான காபன் வரி ஆகியவற்றையும் இரத்துச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Israel உடன் இணைந்து Iran மீது போர் தொடுக்கும் அமெரிக்க அதிபர் Donald Trump பின் முடிவு உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது. இரு நாடுகளும் Hormuz நீரிணையில் குறிப்பிட்ட சரக்குக் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

​அண்மைய நாட்களில், CAA இன் எரிபொருள் விலை கண்காணிப்புப் பட்டியலின்படி, நாடு முழுவதும் பெட்ரோல் விலை சராசரியாக லீட்டருக்கு 1.74 டாெலராக உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பிருந்த விலையை விட 40 சதங்களுக்கும் மேலான அதிகரிப்பாகும்.

Related posts

பட்டிணியால் வாடும் பாலஸ்தீனியர்களுக்கு உதவும் கனடாவிற்கு தடையாக அமையுமா Israel?

canadanews

மோசடி விசாரணைகளை எதிர்கொண்டுள்ள Cricket Canada

canadanews

கனடா NATO செலவின இலக்குகளை எட்டும் என்று நம்பிக்கை வெளியிடுகின்றார் பாதுகாப்பு அமைச்சர்.

canadanews