சர்வதேச அளவில் புகழ்பெற்ற Mexico பிரமிட்டு தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்ட ஒன்று என்றும், இதில் கனேடிய சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்ததாகவும் Mexico அரசாங்கம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
Mexico மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் José Luis Cervantes Martínez கூறுகையில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒரு ‘tactical’ வகை முதுகில் அணியும் Bag வைத்திருந்ததாகவும், அவரிடம் அமெரிக்காவில் 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற Columbine உயர்தரப்பாடசாலையின் துப்பாக்கிச் சூடு தொடர்பான இலக்கியங்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.
Mexico நகருக்கு வடக்கே உள்ள Teotihuacan பிரமிட்டுகளில் சுற்றுலாப் பயணிகள் மீது திங்களன்று துப்பாக்கிச் சூடு நடத்தியவர் Mexico வின் Guerrero வை சேர்ந்த 27 வயதான Julio César Jasso Ramírez என்றும், அவர் தனியாகவே இந்தச் செயலில் ஈடுபட்டார் என்றும் அவர் தெரிவித்தார். அதன் பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியர் குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், 29 வயது கனேடியப் பெண் மற்றும் Colombia வைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் உட்பட குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர்.
Ottawa வில், இந்தத் துயரச் சம்பவத்தில் காட்டிய கவனத்திற்காக Mexico அதிபர் Claudia Sheinbaum விற்கு பிரதமர் Mark Carney நன்றி தெரிவித்ததுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலையும் தெரிவித்தார்.
Mexico வின் வெளி விவகார அமைச்சர் இந்தச் சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளதாக கனேடிய வெளி விவகார அமைச்சர் Anita Anand தெரிவித்தார்.
Mexico விற்கான பயண ஆலோசனையை Ottawa மாற்றியமைக்குமா என்று கேட்கப்பட்டபோது, இரு நாடுகளும் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தெரிவித்த Anand இந்த நேரத்தில், இருதரப்பு உறவு தொடர்பான அனைத்து விடயங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், என்று பதிலளித்தார்.
