கனடா செய்திகள்

அமெரிக்க-Iran இடையிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை சாத்தியமானதா?

Iran வெளிவிவகார அமைச்சர் வெள்ளிக்கிழமை Pakistan இற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா மற்றும் Iran இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் முயற்சி செய்து வரும் நிலையில் இந்தப் பயணம் நடைபெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi, Oman மற்றும் Russia விற்கும் பயணம் மேற்கொளளவுள்ளார்.  Hormuz நீரிணை வழியான எரிசக்தி விநியோக பாதிப்பு மற்றும் பிராந்தியப் போர் பதற்றங்களுக்கு மத்தியில் Iran வெளிவிவகார அமைச்சரின் இந்தப் பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இந்த வாரம் மீண்டும் தொடங்குவதாக இருந்து, ஆனால் எதிர்பாராதவிதமாகத் பிற்போடப்பட்ட Iran மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் ஒரு வேகத்தைக் கொடுக்க பாகிஸ்தான் அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

Hormuz நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து, எரிசக்தி விலைகளை நிலைப்படுத்தவும், அமெரிக்காவிற்கு அதிகளவான கப்பல்கள் வருவதை எளிதாக்கவும், March நடுப்பகுதியில் Trump முதன்முதலில் 60 நாள் விலக்களிப்பை அறிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனையில், Araghchi, Pakistan வெளிவிவகார அமைச்சரான Ishaq Dar மற்றும் Pakistan இராணுவத் தளபதி Asim Munir ஆகியோர் பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் போர்நிறுத்தம் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக Araghchi யின் அறிக்கை தெரிவித்தது. இருப்பினும், இது குறித்த மேலதிக விவரங்கள் எதனையும் அந்த அறிக்கை வெளியிடவில்லை.

​பின்னர், Pakistan வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், “இருதரப்பும் பிராந்திய நிலைமைகள், போர்நிறுத்தம் மற்றும் அமெரிக்க-Iran இடையிலான பேச்சுவார்த்தைச் சூழலில் Islamabad மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் தேர்தல் களத்தில் Anita Anand!

canadanews

அமெரிக்க வரிவிதிப்புகளில் இருந்து சலுகைகளைப் பெற வழிவகுக்குமா பேச்சுவார்த்தை?

canadanews

எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள அமெரிக்க – கனடா.

canadanews