கனடா செய்திகள்

மத்திய அரசு 1.5 பில்லியன் டாெலர் மதிப்பிலான இறக்குமதி வரி விலக்களிப்பை அறிமுகப்படுத்துகிறது.

கடந்த மாதம் அமெரிக்கா தனது இறக்குமதி வரி விதிமுறைகளை விரிவுபடுத்தியதற்குப் பதிலளிக்கும் விதமாக, மத்திய அரசு 1.5 பில்லியன் டொலர் வரி விலக்களிப்பை அறிவித்துள்ளது.

​இந்த அறிவிப்பில் பின்வருவன அடங்கும். ​உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதற்காக, Business Development Bank of Canada வின் கீழ் 1 பில்லியன் டாெலர் மதிப்பிலான புதிய திட்டம். மற்றும் regional tariff response fund இற்கு வழங்கப்படவுள்ள 500 மில்லியன் டாெலர் மேலதிக நிதி.

இந்த புதிய அபிவிருத்தி வங்கித் திட்டம், இரும்பு, அலுமினியம் மற்றும் செப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பொருட்களின் ஏற்றுமதி மீதான அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

​இது வரிகளால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு 50 மில்லியன் டாெலர் வரையிலான கடன் உதவி மற்றும் மூன்று ஆண்டு கால குறைந்த வட்டிக் கடன்கள் போன்ற வசதிகளை வழங்கும்.

​தொழில் துறை அமைச்சர் Mélanie Joly, Ottawa விற்கு தென்கிழக்கே உள்ள ஓர் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று மத்திய அரசின் இந்த நிதி உதவியை அறிவித்தார்.

​குறுகிய காலத்தில் வணிகங்களுக்குத் தேவையான பணப்புழக்கத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதே வேளையில், ஏற்றுமதியாளர்கள் தங்களை மாற்றிக்கொண்டு புதிய சந்தைகளுக்குள் நுழைவதற்கு உதவும் ஒரு விரிவான நடுத்தர கால உத்தியையும் அரசு முன்னெடுத்து வருவதாக Joly மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்றைய தினம் Toronto மற்றும் GTA பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

canadanews

Olympics இன் 2 வது நாளில் Harvey வெண்கலத்தை கைப்பற்றினார் – மீண்டும் அரங்கில் கனேடிய பெண்களின் கால்பந்து

admin

Air Canada விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தம், கதவடைப்பு தொடர்கிறது.

canadanews